சூப்பர் ஹீரோ மின்னல் முரளி.... மிரட்டலான ட்ரெயிலர் வெளியானது!
சென்னை : மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தமிழில் மின்னல் முரளி என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
வரும் டிசம்பர் 24ம் தேதி தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மின்னல் முரளி படம்
மலையாளத்தில் இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் இளம் நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் மின்னல் முரளி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வரும் டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்தப் படம் நெட்பிளக்சில் ரிலீசாக உள்ளது.

சூப்பர் ஹீரோ கதை
தீய சக்தியை வென்று உலகத்தை காக்கும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் டோவினோ தாமஸ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். 90களின் பின்னணியில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதன்மூலம் சூப்பர் ஹீரோவாக மாறும் ஒரு இளைஞனின் கதையை இந்தப் படம் சொல்கிறது.

கிறிஸ்துமஸ் ரிலீஸ்
படத்தில் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமசை ஒட்டிய விடுமுறையை என்ஜாய் செய்யும் விதத்தில் படத்தில் சுவாரஸ்யங்கள் அதிகமாக இருக்கும் என்று இயக்குநர் பாசில் ஜோசப் தெரிவித்துள்ளார். வீக்எண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

நனவாகிய இயக்குநரின் கனவு
தான் எப்போதுமே சூப்பர் ஹீரோ கதைகளுக்கு ரசிகன் என்று தெரிவித்துள்ள படத்தின் இயக்குநர் பாசில் ஜோசப், ரசிகாகள் ரசிக்கும்படியாக ஒரு சூப்பர் ஹீரோ கதையை தான் இயக்க விரும்பியதன் விளைவே இந்த படம் என்றும் கூறியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் தன்னுடைய கனவு நனவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகச்சிறந்த அனுபவம்
படத்தில் டோவினோ சிறப்பான அர்ப்பணிப்புடன் நடித்து கொடுத்துள்ளதாகவும், நெட்பிளிக்சுடன் இணைந்தவுடன் தங்களது கனவு மிகவும் சிறப்பாக நனவாகியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதனிடையே இந்தப் படத்தில் நடித்தது மிகச்சிறந்த அனுபவம் என்று ஹீரோ தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பான திரைக்கதை
படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக ரசிகர்களை கட்டிப் போட்டு வைக்கும்படியான திரைக்கதையுடன் உருவாகியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்தை செய்வது தனக்கு மிகுந்த சவாலாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரெயிலர் வெளியீடு
இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் தற்போது அனைவரையும் கவரும்வகையில் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. படத்தில் மின்னல் முரளியாக சிறப்பான சாகசங்களை செய்கிறார் நாயகன் டோவினோ.


Click it and Unblock the Notifications











