ரிஷப் ஷெட்டியின் காந்தாரா "வராஹ ரூபம்" காப்புரிமை விவகாரம்.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
சென்னை : இயக்குநர் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா வராஹ ரூபம் பாடல் காப்புரிமை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேஜிஎப் திரைப்படத்திற்கு பிறகு கன்னட திரைப்படமான காந்தாரா படத்தின் மீது அனைவரின் பார்வையும் விழுந்துள்ளது. செப்டம்பர் மாதம் திரையரங்கில் வெளியான படம் வசூலை வாரிக்குவித்தது.
இப்படத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்.

காந்தாரா
காந்தாரா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அக்டோபர் 15ந் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்தை பார்த்து வியந்து போன பிரபலங்கள் பலரும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று வெகுவாக புகழ்ந்து பாராட்டினர்.

வராஹ ரூபம் பாடல் சர்ச்சை
இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும், வராஹ ரூபம் பாடல் அனைவரையும் பிரம்பிப்பில் ஆழ்த்தி மெய் சிலிர்க்க வைத்தது. கேரளாவை சேர்ந்த கோவிந்த் வசந்தாவின் இசைக்குழுவால் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு யூட்டியூபில் வெளியிட்டிருந்த நவரசம் பாடலும் வராஹ ரூபம் பாடலும் ஒன்றாக இருப்பதாக காப்புரிமை சர்ச்சை கிளம்பியது. இதை அடுத்து தாய்க்குடம் பிரிட்ஜ் சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை நாடினர்.

தடை நீக்கம்
இதையடுத்து, வராஹா ரூபம் பாடலை ஒளிபரப்ப தடைவிதித்து கோழிக்கோடு முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நவம்பர் மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து அமேசான் பிரைமில் வெளியான கந்தாரா படத்தில் வராஹ ரூபம் பாடலின் ஒரிஜினல் டிராக் மாற்றி அமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து, அவ்வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் வராஹ ரூபம் பாடலுக்கான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்நிலையில் காந்தாரா படத்தின் ' வராஹ ரூபம் ' பாடல் காப்புரிமை வழக்கில் கேரள உயர்நீதிமன்றத்தின் ஜாமின் நிபந்தனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், இயக்குனர் ரிஷ்ப் ஷெட்டி தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரியிடம் சரண்
மேலும், விசாரணைக்காக பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இரண்டு நாட்களுக்கு விசாரணை அதிகாரியிடம் சரணடையுமாறு கிர்கந்தூரையும், ஷெட்டியையும் கேட்டுக் கொண்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சிகளை மிரட்டவோ அல்லது சாட்சியங்களை சிதைக்கவோ கூடாது என்றும் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைத்து விசாரணைக்கு வருவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











