வேறமாறி ஆஃபர்.. மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை டிக்கெட் இலவசம்.. எங்கே தெரியுமா?

சென்னை: நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த படத்திற்காக ரசிகர்கள் இரண்டு ஆண்டுகள் காத்துக் கிடந்த நிலையில், நாளை தியேட்டர்களை தெறிக்கவிட காத்திருக்கின்றனர்.

சினிமா பிரபலங்களுக்கே வலிமை படத்தின் டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என புலம்பி வரும் நிலையில், வலிமை டிக்கெட்டை பெற சூப்பர் மார்க்கெட் ஒன்று சூப்பரான ஆஃபரை அளித்துள்ளது அந்த பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

வலிமை பட டிக்கெட்டுகளை பல்காக புக் செய்து இப்படி விதவிதமாகவும் விற்று வருகிறார்களா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வலிமை டே

வலிமை டே

வியாழக்கிழமை இல்லை நாளை வலிமை டே என தயாரிப்பாளர் போனி கபூரே ட்வீட் போட்ட பிறகு அஜித் ரசிகர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா? வலிமை FDFSஐ அமர்களப்படுத்த காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் செய்யாத முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை வலிமை படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல இடங்களில் புரமோஷன்

பல இடங்களில் புரமோஷன்

இதுவரை இல்லாத அளவுக்கு நடிகர் அஜித்தின் வலிமை படத்திற்கான புரமோஷனை மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை என பல இடங்களில் தயாரிப்பாளர் போனி கபூர் நடத்தி உள்ளார். நடிகர் அஜித் குமார் புரமோஷனுக்கு வரமாட்டார் என்பதால் இயக்குநர் எச். வினோத், வில்லன் நடிகர் கார்த்திகேயா மற்றும் நடிகை ஹூமா குரேஷி இந்த புரமோஷன்களில் கலந்து கொண்டனர்.

டிக்கெட் கிடைக்கவில்லை

டிக்கெட் கிடைக்கவில்லை

இயக்குநர் வெங்கட் பிரபு வலிமை டிக்கெட்டை நான் வாங்கி விட்டேன் என ட்வீட் போட அவரது தந்தை கங்கை அமரன் தம்பியையும் கூட கூட்டிட்டுப் போ என செம ஜாலியாக அரட்டை அடித்த ட்வீட்டுகள் வைரலான நிலையில், காமெடி நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான நடிகை ஆர்த்தி தனக்கு வலிமை டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் FDFS கொண்டாட்டத்தை மிஸ் செய்வது வருத்தமாக இருக்கிறது என்றும் ட்வீட் போட்டு புலம்பி உள்ளர். அஜித் ரசிகையான அவருக்கே டிக்கெட் கிடைக்காத அளவுக்கு டிக்கெட் புக்கிங் செம ஹவுஸ்ஃபுல்லாக சென்று கொண்டிருக்கிறது.

வலிமை டிக்கெட் ஆஃபர்

வலிமை டிக்கெட் ஆஃபர்

வலிமை படம் நாளை வெளியாகும் நிலையில், அதற்கான புரமோஷன்கள் சூடு பறந்து வருகின்றன. மெட்ரோ ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் என பல இடங்களில் வலிமை பேனர்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், வேலூரில் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி மையத்தில் 2999-க்கு மேல் மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை டிக்கெட் இலவசம் என அறிவித்துள்ளனர்.

டிக்கெட் விலை

டிக்கெட் விலை

அந்த பேனரில் ரூ. 500 மதிப்புள்ள வலிமை டிக்கெட் இலவசம் என குறிப்பிடப்பட்டுள்ளது. வலிமை படத்தின் FDFS டிக்கெட் வேலூரிலேயே 500 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், சென்னை உள்ளிட்ட மற்ற இடங்களில் எல்லாம் 1000 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகுமே என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது. வலிமை படத்தை பார்க்க பிளாக்கில் கூட டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களே ஆர்வம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X