சூப்பர் பொண்ணு சுமாரான பையன்... ஹீரோவாகும் வடிவேலுவின் ரீல் மகன்!

புதுமுகங்கள் நடிக்கும் சூப்பர் பொண்ணு சுமாரான பையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

சென்னை: தாத்தா காரைத் தொடாதே படத்தைத் தொடர்ந்து, விஜய் கார்த்திக்கேயன் இயக்கி நாயகனாக நடிக்கும் படம் 'சூப்பர் பொண்ணு, சுமாரான பையன்.

மோகனா மற்றும் ஜீவன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர்கள் மாரிமுத்து, இமான் அண்ணாச்சி, டேனி, சுவாமிநாதன், ஒளிப்பதிவாளர் ஜீவன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா,நடன இயக்குனர்கள் சாண்டி,ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தை பற்றி இயக்குனர் மற்றும் நாயகன் விஜய் கார்த்திகேயன் கூறுகையில்..

வடிவேலு மகன்:

வடிவேலு மகன்:

நான் சிறு வயது முதல் சினிமாவில் பயணிக்கிறேன். வியாபாரி படத்தில் வடிவேலு மகனாகவும், நான் கடவுள் படத்தில் ஆர்யாவின் சின்ன வயது கதாபாத்திரத்திலும், 16 படத்தில் 2வது நாயகனாகவும், மீன்குழம்பும் மண்பானையும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன்.

ஹீரோவாக:

ஹீரோவாக:

மேலும் பாக்கியராஜ் ,அப்புகுட்டி ஆகியோருடன் இணைந்து குஸ்கா படத்தில் கதாநாயகனாகவும், அராத்து எனும் படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து இரண்டாவது ஹீரோவாகவும் நடித்துள்ளேன்.

தாத்தா காரை தொடாதே:

தாத்தா காரை தொடாதே:

நடிப்பு மட்டுமின்றி தாத்தா காரை தொடாதே எனும் படத்தை இயக்கியும் உள்ளேன். இதில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் எம்ஜிஆர் பேரன் ராமசந்திரனும் கதாநாயகர்கள். சூப்பர் பொண்ணு சுமாரான பையன் எனது இயக்கத்தில் இரண்டாவது படம்.

தந்தை, மகன் பாசம்:

தந்தை, மகன் பாசம்:

இப்படத்தை ஒரு கமர்ஷியல் கதையாக உருவாக்கி உள்ளேன். இது தந்தைக்கும் மகனுக்குமான சென்டிமென்டை மையமாக கொண்ட கதை. என் தந்தையாக மாரிமுத்து நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் செந்தில், ஷகிலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

மலேசியாவில் படப்பிடிப்பு:

மலேசியாவில் படப்பிடிப்பு:

ஜனவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பை மலேசியாவில் தொடங்கி தேனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த உள்ளோம்" என இவ்வாறு அவர் தெரிவித்தார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X