எல்லாம் நல்லா நடக்கணும் கடவுளே.. திருப்பதியில் மனமுருகி வேண்டிய ரஜினியின் மகள்கள்!

திருப்பதி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், செளந்தர்யா இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். இவர்கள் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டனர். இதில் சவுந்தர்யா தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வந்திருந்தார்.

சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி, கடந்த 2022-ம் ஆண்டு திடீரென மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். தாங்கள் விவாகரத்து செய்யப்போவதாக இருவருமே ஒன்று போல அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். இவர்களின் இந்த முடிவு கோலிவுட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Super Rajinikanth s daughter s visit tirupati temple

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இதுகுறித்து, தனுஷிடம் பலமுறை பேசி சமாதானப்படுத்தியும் எந்த பயனும்இல்லை. ஆனால், இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டனர். இருப்பினும் இருவருமே தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். தனுஷ் உடனான பிரிவுக்கு பின், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் திரைப்படத்தை இயக்கினார். அப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. இதில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன அப்படம் தோல்வியை தழுவியது.

ரஜினியின் மகள்கள்: இந்நிலையில், திருப்பதி கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் மகள்களான சௌந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோர் இன்று ஏழுமலையானை வழிபட்டனர். சாமி தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு வந்திருந்த சகோதரிகள் இருவருக்கும் விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். இவர்கள் இருவருக்கும் தேவஸ்தான வேத பண்டிதர்கள்ஆசி வழங்கினர். இதில், சௌந்தர்யா தனது கணவன் விசாகன் மற்றும் இரு மகன்களுடன் வந்திருந்தார்.

Super Rajinikanth s daughter s visit tirupati temple

செளந்தர்யா ரஜினிகாந்த்: ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யாவிற்கு, தொழிலதிபர் அஸ்வினுக்கும் 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இடையடுத்து, சௌந்தர்யா ரஜினிகாந்த்,தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.

புதிய வெப் தொடர்: கோச்சடையான் 3டி அனிமேஷன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுக சௌந்தர்யா, நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து புதிய வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கிறார். கேங்க்ஸ் என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தத் தொடரை நோஹா ஆபிரஹாம் இயக்குகிறார். அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X