விஜய் டிவி புகழ் திவாகருக்கு… டும் டும் டும்.. அபியை மணந்தார்!

சென்னை: விஜய் டி.வி புகழ் திவாகர், அபி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சென்னையில் மிகவும் விமர்சையாக நடைபெற்ற விழாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் விஜய் டி.வி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விஜய் டிவி எப்போதும் பல திறமையானவர்களை திரைத்துறைக்கு தந்துள்ளது. அது போல சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றவர்கள் பலர் இன்று திரையுலகில் பின்னணி பாடகர்களாக உள்ளனர். அப்படி வந்தவர் தான் திவாகர், சீசன் 4ல் தனது விடாத முயற்சியால் மயக்கும் மாயக்குரலால் இறுதிவரை வந்து வெற்றி வாகை சூடினார்.

 Super singer diwakar marriage

திவாகர் பல தொலைக்காட்சியில் நடைபெற்ற இசைப்போட்டியில் கலந்து கொண்டுள்ளார். ராஜ் டிவி நடத்திய "வாய்ஸ் ஆப் தமிழ்நாடு" என்ற இசை போட்டியில் இரண்டாமிடம் பிடித்தார். அதேபோல சன் டிவியில் நடத்திய சங்கீத மகாயுத்தம் மற்றும் ஜெயா டிவியில் ஹரியுடன் நான் போன்ற பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது அசாத்தியாக குரலால் ரசிகர்களை கவர்ந்தார்.

 Super singer diwakar marriage

சின்னத்திரையில் மின்னிய திவாகர் முதன் முதலாக ஜெய் நடித்த வடகறி படத்தில் 'நெஞ்சிக்குள்ள நீ மின்னலடிக்க என்ற' பாடலை பாடினார் அந்த பாடல் அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டது. அடுத்து கருப்பன் படத்தில் 'முருக்குமூசை மாமா' பாடல் மிகவும் பிரபலமானது. இவர் இமான் இசையில் தான் அதிக பாடல்களை பாடியுள்ளார். இவர் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் காற்று வெளியிடை படத்தில் 'கேளாயோ கேளாயோ செம்பூவே' என்ற பாடலை பாடியுள்ளார்.

 Super singer diwakar marriage

திவாகர் கடந்த 11 ஆம் தேதி அபி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சென்னையில் மிகவும் விமர்சையாக நடைபெற்ற இவர்கள் திருமண விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் மற்றும் விஜய் டிவி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 Super singer diwakar marriage

இத்திருமணத்தில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியாக கலக்க போவது யாரு புகழ் பழைய ஜோக் தங்கதுரை மற்றும் அமுதவானன் இருவருக்கும் மணமக்களுக்கு கொசு பேட்டை பரிசாக வழங்கி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார். மேலும், திரைப்பட பாடகர் அந்தோணி தாசன் வெங்காய்த்தை பரிசாக கொடுத்தார். இதை பார்த்த மணமக்களும் மேடையில் இருந்தவர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X