Singer Nithyashree: இது என்னோட முதல் கார்.. சந்தோஷத்தை பகிர்ந்த சூப்பர் சிங்கர் பாடகி நித்யஸ்ரீ!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு கலக்கிய பாடகி நித்யஸ்ரீ, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு கலக்கினார்.

விஜய் டிவி பிரபலங்கள் வரிசையாக புதிய கார்களை வாங்கி அடுக்கி வரும் நிலையில், சூப்பர் சிங்கர் புகழ் பாடகி நித்யஸ்ரீயும் புதிதாக கார் வாங்கி உள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் அந்த காருக்கு பூஜைப்போட்ட போட்டோக்களை ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்.

பிரபலங்களை உருவாக்கும் விஜய் டிவி: மற்ற சேனல்களை விட அதிகமாக பிரபலங்களை விஜய் டிவி உருவாக்கி வருகிறது. விஜய் டிவியின் எந்தவொரு ஷோவில் பங்கு கொண்டாலும் அவர்கள் உடனடியாக ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்து விடுகின்றனர்.

திறமையாளர்களுக்கு விஜய் டிவி சம்பளம் அதிகமாக கொடுக்கிறதோ இல்லையோ, அதன் மூலம் கிடைக்கும் பாப்புலாரிட்டியை வைத்து பலரும் சம்பாதித்து ஸ்டார் ஆகி வருகின்றனர்.

 Super Singer fame Nithyashree buys her first car and share pics

கார் வாங்கிய பாடகி நித்யஸ்ரீ: முதல் கார் என்பதே பலரது கனவாக இருக்கும். பல வருடங்களாக பாடிக் கொண்டு இருக்கும் நித்யஸ்ரீ திரைப்படங்களிலும் சில பாடல்களை பாடி வருகிறார். இந்நிலையில், தற்போது தனது சொந்த உழைப்பில் முதல் கார் வாங்கி உள்ள நிலையில், அதற்கு சென்னை பாடியில் உள்ள திருவாலிதாயம் திருக்கோயிலில் பூஜைப் போட்டார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக வாங்கிய கருப்பு நிற உண்டாய் காருக்கு கலக்கலாக மாலைகள் எல்லாம் அணிவித்து அதற்கு முன்னதாக நித்யஸ்ரீ நின்றுக் கொண்டு எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

ட்ரீட் கேட்கும் தோழிகள்: நித்யஸ்ரீ புதிதாக கார் வாங்கி விட்டேன் என அறிவித்த நிலையில், பாடகிகள் மானஸி, அபர்ணா நாராயணன், வ்ருஷா உள்ளிட்ட பலர் கமெண்ட் பக்கத்தில் நித்யஸ்ரீக்கு வாழ்த்து சொல்லியதோடு மட்டும் நிற்காமல் எப்போ ரைடுக்கு கூட்டிட்டுப் போவ என்றும் ட்ரீட் கொடு என்றும் அன்புத் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

நித்யஸ்ரீயின் குரலுக்கு மயங்கி அவருக்கு சப்போர்ட் செய்த ரசிகர்களும் பாடகி நித்யஸ்ரீ கார் வாங்கியதை பார்த்து சந்தோஷமடைந்து வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X