என்ன இவ்ளோ மாடர்னா மாறிட்டாங்க... காதல் மொழியும் பேசியிருக்காங்க!
சென்னை : சூப்பர் சிங்கர் மூலம் பரவலாக அறியப்பட்ட செந்தில் -ராஜலட்சுமி ஜோடி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உரியவர்கள்.
இவர்கள் இருவரும் தற்போது கோலிவுட்டி பல படங்களில் பாடி வருகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் இவர்கள் பிசியாக செயல்பட்டு வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின்மூலம் புகழ் வெளிச்சம் பெற்றவர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி. கடந்த 2018ல் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளர்களாக பங்கேற்றனர். அந்த சீசனில் நாட்டுப்புற பாடல்களை மட்டுமே பாடி ரசிகர்களின் ஆதரவை அள்ளினர்.

டைட்டிலை வென்ற செந்தில்
மேலும் அந்த சீசனில் டைட்டில் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி கொடுத்த புகழால் இருவருக்கும் சினிமாவில் பாடும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது. இருவருமே பல பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடும் வாய்ப்பை தொடர்ந்து பெற்று வருகின்றனர். புஷ்பா படத்தில் ஹே சாமி பாடலை பாடும் வாய்ப்பு ராஜலட்சுமிக்கு கிடைத்தது.

புஷ்பா படப் பாடல்
இந்தப் பாடல் அவரை பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாக்கியுள்ளது. படக்குழு வெளியிட்ட லிரிக் வீடியோவில் அவரும் இடம்பெற்றிருந்தார். நடனமாடிக் கொண்டே பாடிய அவரது ஸ்டைல் பிரபலமானது. சிரித்துக் கொண்டே ராஜலட்சுமி பாடிய இந்தப் பாடல் படத்தில் மட்டுமின்றி யூடியூபிலும் ஏராளமான வியூஸ்களை பெற்றுள்ளது.

சமூக வலைதளங்களில் பிசி
இவர்கள் இருவரும் சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக செயல்பட்டு வருகின்றனர். தொடர்ந்து பல டிக் டாக் வீடியோக்களையும் போட்டோ ஷுட் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். இவர்களை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

மாடர்ன் லுக்கில் புகைப்படம்
தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அழகு அள்ளுகிறது. மாடர்ன் லுக்கிலும், நாட்டுப்புற லுக்கிலும் இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதில் மாடர்ன் லுக்கில் போட்டோஷுட் நடத்தி அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் காதல் மொழியும் பேசியுள்ளார் ராஜலட்சுமி.


Click it and Unblock the Notifications











