செல்வராகவன் நினைவுப்படுத்திய நட்பு.. இன்ஸ்டாகிராமில் பிரபல பாடகி ராஜலட்சுமி உருக்கம்!

சென்னை : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி.

இவர்கள் இருவரும் இணைந்து பிரபுதேவாவின் சார்லி சாப்லின் 2 படத்தில் பாடிய சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றத்தந்தது.

இதேபோல புஷ்பா படத்தில் ராஜலட்சுமி பாடிய வாய்யா சாமி பாடலும் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

பாடகர்கள் செந்தில் -ராஜலட்சுமி

பாடகர்கள் செந்தில் -ராஜலட்சுமி

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் நாட்டுப்புற பாடகர்களான செந்தில் மற்றும் ராஜலட்சுமி. நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களை அதிகமாக பாடி ரசிகர்களை இவர்கள் கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சி கொடுத்த புகழையடுத்து சினிமாவில் பாடும் வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர். பிரபுதேவாவின் சார்லி சாப்லின் 2 படத்தின் சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடலை இருவரும் இணைந்து பாடினர்.

திரைப்படங்களில் பாடல்கள்

திரைப்படங்களில் பாடல்கள்

இந்தப் பாடல் மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. தொடர்ந்து புஷ்பா படத்தில் வாய்யா சாமி என்ற பாடலை ராஜலட்சுமி பாடியிருந்தார். இந்தப் பாடல் இவரை மேலும் பட்டிதொட்டியெல்லாம் புகழடைய செய்துள்ளது. தொடர்ந்து சினிமாவில் மட்டுமில்லாமல் பல்வேறு இசைக் கச்சேரிகளிலும் இருவரும் பாடி வருகின்றனர். வெளிநாட்டு கச்சேரிகளிலும் பாடி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் இருவரும் பிசியாக பல்வேறு பதிவுகளை போட்டு வருகின்றனர். குறிப்பாக ராஜலட்சுமி சமூக அக்கறையோடு பல்வேறு பதிவுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய நட்பு குறித்து அவர் பெருமையுடன் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இயக்குநர் செல்வராகவன் நட்பு குறித்த தன்னுடைய ஏக்கத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இதை படிக்கும்போது வருத்தமாகவும் அதே நேரத்தில் தன்னுடைய தோழிகளின் நினைவு வந்ததாகவும் ராஜலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

தோழிகள் குறித்து ராஜலட்சுமி

தோழிகள் குறித்து ராஜலட்சுமி

ராஜலட்சுமி தன்னுடைய தோழிகள் மூவர் குறித்தும் தங்களுடைய லூட்டிகள் குறித்தும், சாகும் தருவாயில் இருப்பதாக கூறினாலும் தன்னுடைய தோழிகள் செய்யும் குறும்புகள் குறித்தும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவை பகிர்ந்துள்ளார். வாழவே பிடிக்கவில்லை என்றும் சாக முடிவெடுத்துவிட்டதாக தன்னுடைய வருத்தத்தை கூறினாலும் தன்னுடைய காலேஜ் லீவ் இருக்கும்போது சொல்கிறேன் அந்த நேரத்தில் எந்த கருமத்தை வேண்டுமானாலும் பண்ணிக்கோ என்று அவர்கள் குறும்பாக சொல்வதையும் நினைவுக் கூர்ந்துள்ளார்.

மனபாரம் போக்கும் நண்பர்கள்

மனபாரம் போக்கும் நண்பர்கள்

இதைக்கேட்டால் தன்னுடைய மனபாரம் அனைத்தும் நீங்கி ஆறுதல் கிடைத்துவிடும் என்றும் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். எந்த சூழலிலும் சிறப்பான நட்பை விட்டுக் கொடுக்காமல் வாழ்க்கையை வாழவும் ராஜலட்சுமி அறிவுறுத்தியுள்ளார். இந்த வீடியோ பதிவிற்கு ஏராளமான லைக்சும் கமெண்ட்சும் கிடைத்துள்ளது. ராஜலட்சுமி தொடர்ந்து இதுபோன்ற அதிகமான பதிவுகளை செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X