'உ' படத்தில் சூப்பர் சிங்கர் வின்னர் ஆஜீத், டபுள் அறிமுகம்!

By Shankar

ஃபீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் உ படத்தில், சூப்பர் சிங்கர் சுட்டி ஆஜீத் நடிகராகவும், பின்னணிப் பாடகராகவும் ஒரே படத்தில் இரட்டை பரிமாணத்தில் அறிமுகம் ஆகிறான்.

இந்த சுவாரஸ்மான டபுள் அறிமுகம் நடந்தது எப்படி என்று இயக்குநர் ஆஷிக் கூறுகையில், "எங்க படத்தில் ஒரு குட்டி டூயட் பாட்டு வருது. அதை யாரை பாட வைக்கலாம்னு இசையமைப்பாளர் அபிஜித் ராமசுவாமியும் நானும் பேசிட்டிருந்தோம். அப்போதான் சூப்பர் சிங்கர் போட்டில ஆஜித் பாடிட்டிருந்தான். எப்படியும் பைனல்ஸ்ல அவன்தான் ஜெயிப்பான்னு எல்லாரும் சொன்னாங்க. அப்டியே நடந்தது. ஆனா, அவன் பைனல்ஸ் ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே நாங்க அவனை பாட வைக்கிறதுன்னு முடிவு பண்ணி அவங்க பெரியப்பா கிட்ட பேசிட்டோம். போட்டியில ஜெயிச்ச உடனே முதன்முதலாக 'உ' படத்திற்காக பாட வச்சோம்.

"திக்கித் தெணறுது தேவதை, வெட்கப்படுதொரு பூமழை"ன்னு தொடங்குற அழகான டூயட் பாட்டு. முருகன் மந்திரம் எழுதியிருக்கார். சூப்பரான வரிகள். ஆஜித் கூட பா.ஸ்ருதின்னு இன்னொரு குட்டிப்பொண்ணை பாட வச்சோம். செம காம்பினேஷன். 45 நிமிஷத்துல என்ஜாய் பண்ணி பாடி முடிச்சிட்டான். சினிமாவுல என்னோட முதல் பாட்டே இவ்ளோ அழகா அமைஞ்சது சந்தோசமா இருக்குன்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்.

ரெக்கார்டிங் தியேட்டர்ல இருந்து வழியனுப்பி வைக்கிறப்போ, கூட வந்திருந்த ஆஜீத் பெரியப்பா கிட்ட ஆஜீத் அழகா பாடிட்டான். அந்த பாட்டுல நடிக்க வைக்கிறதுக்கு ஒரு சுட்டிப்பையனை தேடிட்டிருக்கோம்னு சொன்னோம். ஆஜித்துக்கு நடிக்கிறதுக்கும் ஆசை இருக்குன்னு, அவன் அழகா நடிப்பான்னு சொன்னாரு.

அப்டியே அடுத்த வாரத்துல அவனைக் கூட்டிட்டு அம்பாசமுத்திரம் கிளம்பிட்டோம். அவனுக்கு ஜோடியா மதுமிதான்னு ஒரு குட்டிப் பொண்ணைபொண்ணை நடிக்க வச்சோம். அவங்க காம்பினேஷனும் செம க்யூட். பாட்டு எதிர்பார்த்ததை விட ரொம்ப அழகா வந்திருக்கு.

'உ' படத்தில் நடிகராகவும் பின்னணிப் பாடகராகவும் ஆஜீத் அறிமுகம் ஆகிறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்னு ஆஜீத் அம்மா, பெரியப்பா, அக்கா எல்லாரும் சொன்னாங்க. அதையேதான் நாங்களும் அவங்ககிட்ட சொன்னோம்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X