சென்ஸ் இல்லை.. மேனர்ஸ் இல்லை.. குஷி பட இயக்குநருக்கே சீன் சொல்லிக் கொடுத்த குட்டிப் பாப்பா!
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நிலையில், குட்டிப் பாப்பா ஒருவர் குஷி பட வசனத்தை பேசியது தீயாக பரவி வருகிறது.

விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து கொண்டு ஜோதிகா போல அந்த குட்டிப் பொண்ணும் விஜய் போல எஸ்.ஜே. சூர்யாவும் நடத்திய க்யூட்டான உரையாடல் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
குழந்தைகளையும் கவர்ந்த குஷி: "கட்டிப்புடி கட்டிப்புடிடா" பாடல், இடுப்பு சீன், கிளைமேக்ஸ் லிப் லாக் என அடல்ட் ஒன்லி படமான குஷி படத்தை கூட விஜய் இருப்பதால் ஏகப்பட்ட குழந்தைகள் பார்த்து காட்சிகள் வரை மனப்பாடம் செய்து வைத்து அந்த படத்தின் இயக்குநருக்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு இருக்க காரணமே தளபதி விஜய் தான் என்பதால், குழந்தைகளை மனதில் வைத்துக் கொண்டு படங்களில் நடிக்க வேண்டிய பொறுப்பும் அதிகம் அவருக்கு உண்டு எனக் கூறுகின்றனர்.
எஸ்.ஜே. சூர்யாவுடன்: குஷி படத்தில் லவ் லெட்டர் படிக்கும் சீனில் ஜோதிகா விஜய்யை திட்டும் காட்சிகள் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நிலையில், அந்த சீனை எஸ்.ஜே. சூர்யா முன்னிலையில் அவருடனே ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குட்டி பாப்பா பேசிய காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
செம க்யூட்: சென்ஸ் இல்லை.. மேனர்ஸ் இல்லை என எஸ்.ஜே. சூர்யாவை திட்டுவதாகட்டும், அய்யோ அந்த சீன் இல்லை, அதுக்கு முன்னாடி இந்த டயலாக் வரும் என எஸ்.ஜே. சூர்யாவையே கரெக்ட் பண்ணும் அந்த பெண் குழந்தையின் அழகான நடிப்பும் சின்சியாரிட்டியையும் பார்த்தாலே செம க்யூட்டாக இருக்கு என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர். எஸ்.ஜே. சூர்யா அந்த குழந்தையை கொஞ்சிக் கொண்டே அவருடன் நடித்த காட்சிகள் எல்லாம் வேறலெவல்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: மார்க் ஆண்டனி படத்தில் இந்த ஆண்டு மாஸ் காட்டிய எஸ்.ஜே. சூர்யா அடுத்து தீபாவளிக்கு கார்த்திக் சுப்புராஜ் நடிப்பில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அந்த படத்தின் புரமோஷனுக்காகத் தான் விஜய் டிவியில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்ட நிகழ்ச்சி ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











