சூப்பர் சிங்கர் ஜுனியர் 8 டைட்டில் வின்னர் இவர் தான்...முதல் பரிசு எத்தனை லட்சம் தெரியுமா?
சென்னை : விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்காகவும் சூப்பர் சிங்கர் ஜுனியர் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.
Recommended Video
ரொம்ப ஜாலியாக குட்டீஸ்களின் கலாட்டாவுடன் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக சித்ரா, எஸ்பிபி சரண், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் இருந்து வருகின்றனர். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
குட்டீஸ்களின் இனிமையான குரலில், சூப்பர் ஹிட் பாடல்களை கேட்ட அதிகமானவர்கள் ஆர்வம் காட்டுவதால் இந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு வாரமும் ஃபேன்ஸ் பேஸ் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 8
அனிருத் உள்ளிட்ட பல திறமைசாலிகளை தமிழ் சினிமாவிற்கு தந்த சூப்பர் நிகழ்ச்சியின் மற்றொரு பகுதியான சூப்பர் சிங்கர் ஜுனியர்ஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது சீசன் 8 நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மாகாபா ஆகியோர் தொகுத்து வழங்கி வந்தனர்.

இறுதிப் போட்டியில் 5 பேர்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கிய சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் நடைபெற்று வந்தது. மொத்தம் 20 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டு, கடைசியாக 5 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் இருந்து 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என சொல்லப்பட்டிருந்தது.

டைட்டில் வின்னர் இவர் தான்
இந்நிலையில் சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் யுவர்சங்கர் ராஜா கலந்து கொண்டார். டைட்டில் வின்னர் யார் என்பதை அறிவித்த யுவன்சங்கர் ராஜா பரிசுகளை வழங்கினார். சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 8 ன் டைட்டிலை கிரிஷாங்க் வென்றார்.

எவ்வளவு பரிசு தெரியுமா
டைட்டில் வென்ற கிரிஷாங்கிற்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான ஒரு வீடு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு தனது இசையில் பாட சான்ஸ் கொடுப்பதாக ஃபினாலே மேடையிலேயே யுவன் அறிவித்தார். இதைக் கேட்டதும் சந்தோஷத்தில் கிரிஷாங்க் கண்ணீர் விட்டு அழுதார். இரண்டாவது இடம் பிடித்த ரிஹானாவுக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.மூன்றாவது இடத்தை நேஹா பிடித்தார். அவருக்கு ரூ.3 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

டைட்டில் வென்ற ரெளடி பேபி டீம்
ரெளடி பேபி, டான் தாதா என இரு அணிகளாக பிரித்து நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியில் ரெளடி பேபி டீமை சேர்ந்த கிரிஷாங்க் டைட்டில் வென்றுள்ளார். டான் தாதா டீமை சேர்ந்த ரிஹானா மற்றும் நேஹா ஆகியோர் முறையே 2வது மற்றும் 3வது பரிசுகளை வென்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











