வாவ் நடிப்பு.. பலே பாட்டு.. வாயைப் பிளக்க வைத்த.. சூப்பர் சிங்கர் மாளவிகா !

சென்னை : வெல்வெட் நகரம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் சூப்பர் சிங்கர் மாளவிகா.

நடிகை வரலஷ்மி தனி நாயகியாக நடித்து அசத்தியிருக்கும் படம் தான் வெல்வெட் நகரம். இந்த படத்தை மனோஜ் குமார் நடராஜன் இயக்கியிருக்கிறார். இந்த படம் நாளை வெளியாக உள்ளது.

இதற்கு முன்பே படத்தின் முன்னோட்ட காட்சி சினிமா பிரபலங்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் திரையிடபட்டுள்ளது. இதில் படம் பார்த்த பலரும் படத்தை புகழ்ந்து வரும் நிலையில் படம் கண்டிப்பாக இந்த வருடத்தின் சிறந்த த்ரில்லர் படமாக இருக்கும் என்று குறிப்பிட்டு கூறியுள்ளனர் .

 பாடகி மாளவிகா

பாடகி மாளவிகா

வெல்வெட் நகரம் படத்தில் பாடகி மாளவிகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். வெல்வெட் நகரம் பார்த்த பலரும் படத்தை பற்றிய பல விசயங்களை பகிரும் போது மாளவிகாவின் கதாபாத்திரம் பற்றியும் மாளவிகாவின் நடிப்பு பற்றியும் புகழ்ந்து பேசினார்கள். மாளவிகா இந்த படத்தில் மிக முக்கிய மற்றும் கதையின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

 திரில்லர் படம்

திரில்லர் படம்

படம் ஒரு த்ரில்லர் படம் என்பதால் படத்தில் பல சண்டை காட்சிகளும் பல கொலை காட்சிகளும் இருக்கிறது .பல இடங்களில் பயம் மற்றும் கோபத்தை சிறப்பாக காட்டி நடித்திருக்கிறார் மாளவிகா. மாளவிகாவின் முதல் படம் இதுவே ஆகும். தனது முதல் படத்திலே சிறந்த நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

 சமமான வாய்ப்பு

சமமான வாய்ப்பு

இந்த கதையும் அந்த கதாபாத்திர வடிவமைப்பும் சரியாக மாளவிகாவிற்கு பொருந்தி அதனை சிறப்பாக செய்து ரசிகர்களின் கைதட்டை பல இடங்களில் பெற்று விடுகிறார் மாளவிகா. மேலும் மாளவிகா படத்தின் இறுதியில் ஒரு முக்கிய மாற்றத்தை கதையில் எடுத்து வரும் போது நாயகிக்கு சமமான நடிப்பை கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம் .

 சூப்பர் சிங்கர்

சூப்பர் சிங்கர்

மாளவிகா தென்னிந்திய மொழிகளில் சிறந்த பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சூப்பர் சிங்கரில் பாட்டு பாடி கொண்டிருக்கும் போது தமிழக ரசிகர்களின் பேராதரவு இருந்தது. தற்போது நடிகையாகவும் சிறந்த நடிப்பை கொடுத்து இருப்பதால் தமிழில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X