கனவு நிறைவேறிடுச்சு... இளையராஜாவுக்காகப் பாடிய சூப்பர் சிங்கர் பிரியங்கா!

By Vignesh Selvaraj

Recommended Video

கனவு நிறைவேறிடுச்சு... இளையராஜாவுக்காகப் பாடிய சூப்பர் சிங்கர் பிரியங்கா!- வீடியோ

சென்னை : விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்' போட்டியில் கலந்துகொண்டு தனது இனிமையான குரல் வளத்தால் வெற்றி பெற்றவர் பிரியங்கா. பல் மருத்துவம் படித்துவரும் பிரியங்காவுக்கு, பெரிய பின்னணி பாடகியாக வேண்டும் என்பது தான் கனவு.

பிரியங்காவின் கனவு இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பக்தி ஆல்பங்களில் பாடி வந்த பிரியங்கா, அதன் பிறகு கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். இயக்குனர் பாலாவின் கண்ணில் பட்டு சினிமாவிலும் பாடகியானார். 'அவன் இவன்' படத்தில் 'ஒரு மலையோரம்...' என்ற பாடலை விஜய் யேசுதாசுடன் இணைந்து பாடினார் பிரியங்கா.

Super singer priyanka sung for Ilaiyaraja

இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது பிரியங்காவின் நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்த ஆசையும் இப்போது நிறைவேறியிருக்கிறது. இளையாராஜாவின் இசையில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பாலா படத்திற்காகப் பாடியிருக்கிறார் பிரியங்கா.

நாச்சியார் படத்தில் இடம்பெறும் 'ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து' என்று தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடலை தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியுள்ளார்.

பிரியங்கா திரைப்படப் பின்னணி பாடகியாக வேகமாக வளர்ந்து வருவது குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ரெக்கார்டிங்கின் போது எடுக்கப்பட்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருக்கும் பிரியங்கா தனது கனவு நிறைவேறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X