Super Star Ajith: 'நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்..' என்ன அஜித்தும் களத்துல குதிச்சிட்டாரு..?

சென்னை: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியது வைரலானது.

ரஜினியின் குட்டி ஸ்டோரியும் நடிகர் விஜய்யை அட்டாக் செய்வதாக உள்ளது என விவாதம் எழுந்தது.

ரஜினி - விஜய் என இருதரப்புக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பிரபலங்களும் ரசிகர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், அஜித் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என இன்னொரு பஞ்சாயத்தும் ஆரம்பமாகியுள்ளது.

 Super Star Ajith: Actor Ajith talking about the Superstar title is trending now

அஜித் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்: தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகரான ரஜினிகாந்த், ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி தான் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். ஆனால், கடந்த சில வருடங்களாக சரியான ஹிட் படங்கள் கொடுக்காததால், ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து விமர்சனம் எழுந்தது.

அதாவது தற்போது தயாரிப்பாளர்களின் சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய் தான் என பேச்சுகள் வலம் வருகின்றன. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பேசியது வைரலானது. விஜய் படங்களுக்கு தான் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓப்பனிங் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால், அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பலரும் கூறி வருகின்றனர்.

ஒருநேரத்தில் விஜய் - அஜித் இடையே தான் கடும் போட்டி காணப்பட்டது. 2000ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்த விஜய் - அஜித் மோதல், கோலிவுட்டை எப்போதுமே பரபரப்பாக வைத்திருந்தது. இருவரது ஓப்பனிங் பாடலிலும் பெர்சனல் அட்டாக் அதிகமாகவே இருந்தது. "ஏற்றிவிட தந்தையும் இல்லை ஏந்திக்கொள்ள தாய் மடி இல்லை" என விஜய்க்கு எதிராக அஜித் எகிறி அடித்தார்.

சினிமாவை தாண்டி விஜய்யும் அஜித்தும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், அவர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால் கேட்கவே வேண்டாம். ஆனால் கடந்த சில வருடங்களாக அஜித் சினிமா மட்டும் இல்லாமல் பைக் ட்ரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால், விஜய் உட்பட மற்ற நடிகர்களுடன் மோதுவதோ அல்லது பஞ்ச் வைத்து அறிக்கை விடுவதோ கிடையாது.

இந்நிலையில் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அஜித் பேசியதாக அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதாவது உல்லாசம் படத்தில் நடித்து வந்த அஜித், அப்போது ஒரு பத்திரிகைக்கு பேட்டிக் கொடுத்துள்ளார். அதில் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அஜித் செம்ம கெத்தாக கூறியுள்ளார். கண்டிப்பாக நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அஜித் பேசியதை இப்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X