Super Star: "நோபல் பரிசு ரேஞ்சுக்கு இந்த சூப்பர் ஸ்டார்..” விஷ்ணு விஷாலுக்கு ப்ளூ சட்டை மாறன் பஞ்ச்
சென்னை: கடந்த 7ம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்களுக்கு கமல்ஹாசன் பார்ட்டி கொடுத்திருந்தார்.
அப்போது கமல், அமீர்கானுடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்திருந்த விஷ்ணு விஷால், அவர்களை சூப்பர் ஸ்டார் என கூறிவிட்டு, பின்னர் ஸ்டார்ஸ் என எடிட் செய்திருந்தார்.
இதற்கு அவர் தற்போது விளக்கம் கொடுத்துள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறன் பங்கமாக ட்ரோல் செய்துள்ளார்.

விஷ்ணு விஷாலுக்கு ப்ளூ சட்டை மாறன் பஞ்ச்
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த 7ம் தேதி தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து திரையுலக பிரபலங்களுக்கு அவர் பார்ட்டி கொடுத்து அசத்தினார். அதில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது கமல், அமீர்கான் ஆகியோருடன் விஷ்ணு விஷால் போட்டோ எடுத்திருந்தார்.
அந்தப் போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்திருந்த விஷ்ணு விஷால், கமல்ஹாசன், அமீர்கான் இருவரையும் சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டிருந்தார். பின்னர் அந்த பதிவில் சூப்பர் ஸ்டார் என்பதை எடிட் செய்து ஸ்டார்ஸ் என மட்டும் போஸ்ட் போட்டிருந்தார். கடந்த சில தினங்களாக சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி, விஜய் இருவரிடையே பெரிய பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கிறது.
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியிருந்தார். அதற்கு ஜெயிலர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பதிலடி கொடுத்திருந்தார். பின்னர் மீண்டும் லியோ சக்சஸ் மீட்டில் குட்டி ஸ்டோரி கூறி வைப் கொடுத்தார் விஜய். இப்படி மாறி மாறி சூப்பர் ஸ்டார் டைட்டில் பற்றிய பஞ்சாய்த்து இன்னும் முடிந்தபாடில்லை.
இதனால் பயந்துபோன விஷ்ணு விஷால், கமல், அமீர் கான் இருவரையும் சூப்பர் ஸ்டார்ஸ் என குறிப்பிட்டிருந்ததை எடிட் செய்திருந்தார். மேலும், இந்த எடிட்டிங் வெர்ஷன் குறித்து விளக்கம் கொடுத்து ட்வீட் போட்டுள்ளார். அதில், சாதனை படைத்த எல்லோருமே சூப்பர் ஸ்டார்கள் தான். இதில் நான் எடிட் செய்ததை வைத்து எந்த நெகட்டிவிட்டியையும் பரப்ப வேண்டாம். ஐ லவ் ஆல் சூப்பர் ஸ்டார்ஸ் என குறிப்பிட்டிருந்தார்.

இதனை ட்ரோல் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "யப்பா.. நோபல் பரிசு ரேஞ்சுக்கு இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு இவங்க குடுக்கற அலப்பறை இருக்கே... மக்கள் யாரையும் சூப்பர் ஸ்டார், உலகநாயகன், தல, தளபதின்னு கூப்புடறது இல்ல. அவங்களை பொறுத்தவரை ரஜினி, கமல், அஜித், விஜய். அவ்வளவுதான். இந்த அல்லக்கை காக்காங்கதான் கத்திக்கிட்டு கெடக்கு" என கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











