Super Star: G Pay-ல கூட தலைவர் தான் சூப்பர் ஸ்டார்... ரஜினியை விடாமல் துரத்தும் ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதனிடையே ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியிருந்தார்.

இதனை ட்ரோல் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன்,, தற்போது இன்னும் செம்ம மாஸ்ஸான மீம் போட்டு ரஜினியை கலாய்த்துள்ளார்.

 Super Star: Blue Sattai Maran Troll Rajini again about Superstar Title

கூகுள் பே-ல கூட ரஜினி தான் சூப்பர் ஸ்டார்: ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் காணப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. முன்னதாக ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் 28ம் தேதி நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தனது சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து மிக வெளிப்படையாக பேசியிருந்தார் ரஜினி. சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு தான் ஆசைப்பட்டது இல்லை என்றும், அதேநேரம் அதனை நினைத்து பயந்தது கிடையாது எனவும் கூறினார். இதோடு இல்லாமல் 'காகம் - பருந்து' என குட்டி ஸ்டோரியும் கூறி ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தார். கடைசியில் இந்த கன்டெண்ட் அனைத்தும் ரஜினிக்கு எதிராகவே திரும்பியது.

ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, வலைப் பேச்சு பிஸ்மி என பலரும் சூப்பர் ஸ்டார் டைட்டிலை வைத்து ரஜினியை பங்கம் செய்தனர். அதேபோல் ரஜினி தன்னை தான் காகம் எனக் கூறுகிறார் என்ற ப்ளூ சட்டை மாறன், அதற்கு பதிலடியாக அடுத்தடுத்து மீம்ஸ் போட்டு ரஜினியையும் அவரது ரசிகர்களையும் கடுப்பாக்கினார். மேலும், 'காகம் - பருந்து' குட்டி ஸ்டோரிக்கு பதில் கொடுக்கும் விதமாக, 'அண்டங் காக்கை' கதையும் கூறி மாஸ் காட்டினார்.

 Super Star: Blue Sattai Maran Troll Rajini again about Superstar Title

இருப்பினும் இப்போது வரை விடாது கருப்பு போல ரஜினியை விரட்டி விரட்டி ட்ரோல் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். தற்போது தனது டிவிட்டரில் ரஜினி ரசிகரின் வீடியோவை ஷேர் செய்துள்ள அவர், "Google Pay போட்டு பாருங்க. இந்தியாவுலயே.. ஏன் ஆசியாவுலயே தலைவர்தான் சூப்பர் ஸ்டார் - பருந்துக்குஞ்சு. 'என்னது.. Google Pay போடணுமா?" என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

அதாவது தலைவரின் தீவிர ரசிகர் ஒருவர், அர்னால்டு, அமிதாப் பச்சன், ஷாருக்கான் என யாராக இருந்தாலும் தலைவர் ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என பெருமையாக பேசுகிறார். மேலும், "கூகுள் பே-ல ரஜினி பெயரை போட்டாலும் அவர்தான் சூப்பர் ஸ்டார் என காட்டும்" என்றுள்ளார். கூகுள் என்பதை கூகுள் பே என மாற்றிக்கூறிய ரஜினி ரசிகரை, ப்ளூ சட்டை மாறன் பருந்து குஞ்சு என கலாய்த்து இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார். தற்போது இது ரஜினி ரசிகர்களை மீண்டும் கடுப்பாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X