SuperStar: “MGRதான் ஒரே சூப்பர்ஸ்டார்... ரஜினி ஏமாற்ற முடியாது”: கிழித்து தொங்கவிட்ட மன்சூர் அலிகான்

சென்னை: சந்தானம் நடித்துள்ள கிக் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

கிக் இசை வெளியீட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து கருத்து தெரிவித்தார்.

 Super Star: Mansoor Ali Khan Critics that Rajini is not a superstar

அப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என மிக காட்டமாக விமர்சித்தார்.

ரஜினியால் இனி மக்களை ஏமாற்ற முடியாது: 1990களில் இருந்தே ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் மன்சூர் அலிகான். 90களில் முன்னணி வில்லன் நடிகராக மிரட்டியவர், இப்போது காமெடி உட்பட மற்ற கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ்ஜின் ஃபேவரைட் நடிகர்களில் மன்சூர் அலிகான் மிக முக்கியமானவர். இதனால், லோகேஷின் லியோ படத்தில் மன்சூர் அலிகானையும் நடிக்க வைத்துள்ளார்.

லியோவில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள மன்சூர் அலிகான், நேற்று நடைபெற்ற கிக் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் மன்சூர் அலிகான். அப்போது லியோ இசை வெளியீட்டு விழா குறித்து கேட்டதற்கு, சந்திரயான் 3ல் நடக்கும் என நக்கலாக பதில் கொடுத்தார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்தும் காட்டமாக விமர்சித்தார்.

அதாவது, "ரஜினி சினிமாவில் இடதுசாரி, ஆனால் நிஜத்தில் வலதுசாரி. ரவுடி, தாதாக்களை நேரில் சந்திக்கும் இவர் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது" என விமர்சித்தார். அப்போது அவரிடம் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கும் அதிரடியாக பதில் கூறிய மன்சூர் அலிகான், "இந்த சூப்பர் ஸ்டார் பற்றியெல்லாம் எங்கிட்ட பேசாத. இங்க ஒரேயொரு சூப்பர் ஸ்டார் அது MGR மட்டும் தான்" என அதிரடியாக கூறியுள்ளார்.

 Super Star: Mansoor Ali Khan Critics that Rajini is not a superstar

விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தொடங்கிய சூப்பர் ஸ்டார் டைட்டில் பஞ்சாயத்து இன்னும் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என நடிகர் சரத்குமார் பேசியிருந்தார். இதற்கு விஜய் தரப்பில் இருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து சரத்குமாரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் வைரலானது.

இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியும் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து பேசியிருந்தார். அதுமட்டும் இல்லாமல் காகம் - பருந்து கதையும் கூறி கோலிவுட்டை பதற வைத்தார். இதனால் மீண்டும் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்த சர்ச்சை வைரலானது. இதனையடுத்து தற்போது மன்சூர் அலிகானும் ரஜினியை விமர்சித்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X