போய் வேலைய பாருப்பா.. எல்லா இடத்துக்கும் வராதே.. ரசிகரை கண்டித்த ரஜினிகாந்த்!

சென்னை : ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பிற்காக நேபாளம் செல்ல சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த், ரசிகர் ஒருவரை கண்டித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ் குமார், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் 70 சதவீதப்பணிகள் முடிந்துள்ளதால், அனேகமாக ஏப்ரல் மாதம் படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர்

ஜெயிலர்

தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார், ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, ஜெய்லராக நடித்துள்ளதாகவும், ஜெயிலில் இருந்து சில கைதிகள் தப்பிக்க முயற்சி செய்கின்றனர். அதை ரஜினி தடுத்து நிறுத்தவே அவருக்கும் வில்லன்களுக்கும் மோதல் வெடிக்கின்றது. அதன் பிறகு நடப்பதே ஜெயிலர் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள்

அதிரடி ஆக்ஷன் காட்சிகள்

நெல்சனின் முந்தைய படங்களைப் போல டார்க் காமெடி படமாக இல்லாமல் இப்படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ஜெயில் போலவே பிரம்மாண்ட செட் போடப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ரசிகரை கண்டித்த ரஜினி

ரசிகரை கண்டித்த ரஜினி

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் நான்காம் கட்டப் படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற உள்ளதால், அதில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, ஐ லவ் யூ தலைவா என ஓடி வந்த ரசிகர், ஒருவரை எல்லா இடத்துக்கும் வராதீங்க... போய் வேலைய பாருங்க வேலைதான் முக்கியம் என்று கைகளை அசைத்தபடி கண்டிப்புடன் கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

லால் சலாம் படத்தில்

லால் சலாம் படத்தில்

தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் பூஜை கடந்த நவம்பர் மாதம் போடப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X