தட்டி கொடுப்பதை தன் வாழ்க்கையில் மிக முக்கியமான பண்பாக கருதும் ரஜினி

சென்னை : பொதுவாகவே நல்ல படம் , நல்ல முயற்சி என்று தெரிந்தால் அவர்களை தட்டி கொடுப்பதும் பாராட்டுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினி மறக்காமல் செய்துவிடுவார். தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற பந்தா ஒரு பொழுதும் செய்ய மாட்டார். எத்தனையோ புது இயக்குனர்களுக்கு தங்க சங்கிலி பரிசளித்து உள்ளார்.

அவருடைய நல்ல பண்புகளை பல நடிகர்கள் , இயக்குனர்கள், சினிமா பிரபலங்கள் பல சமயங்களில் பாராட்டியது உண்டு. அப்படி பலரை பாராட்டும் ரஜினி அவர்கள் தனது நெருங்கிய சொந்தமான ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ஒரு வித்யாசமான படம் என்பதை அறிந்து கண்டிப்பாக பாராட்டாமல் இருப்பாரா என்ன ?

super star rajini appreciates malayalam movie

இளையராஜா, கே.ஜே. யேசுதாஸ் ஆகியோரின் இசை குருவான தட்சிணாமூர்த்தியின் இசையில் சாந்தி கிருஷ்ணா, சுதா மகேந்திரன், மதுவந்தி. புதுமுகங்கள் ப்ரணவ் சுரேஷ், பிரிசிதா உதய் ஆகியோருடன் ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள "ஷியாம ராகம்" மலையாள படத்தின் சிறப்பு காட்சி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள லீமேஜிக் லேண்டர்ன் பிரிவியு தியேட்டரில் நடந்தது .ரஜினிகாந்த் படத்தை பார்த்து விட்டு ஒய்.ஜி.மகேந்திரன் இயக்குனர் சேது இய்யாள், தயாரிப்பாளர்கள் கே.விஜயலட்சுமி, லீனா ஆனந்த் மற்றும் படக் குழுவினர் அனைவரிடமும் தனது பாராட்டினை தெரிவித்தார்.

super star rajini appreciates malayalam movie

படத்தின் கலைஞர்கள் பலருடன் செல்ஃபியும் எடுத்து கொண்டார். படத்தின் குழுவினர் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். லதா ரஜினிகாந்த் உடன் இருந்து படத்தை பார்த்தது மட்டும் அல்லாமல் படத்தில் பணிபுரிந்த தொழில் நுட்ப வல்லுநர்களை மிகவும் புகழ்ந்தார்.

super star rajini appreciates malayalam movie

சூப்பர்ஸ்டாருடைய ஆல் டைம் ஸ்பெஷல் காஸ்ட்யூம் - கருப்பு , அதற்கு ஏற்றார் போல் லதா ரஜினி அவர்களும் கருப்பு புடவையில் மேட்சிங் மேட்சிங் செய்து ஜோடியாக வந்து அசத்தினார். ஜோடி போட்டு இவர்கள் சில இடங்களுக்கு மட்டும் தான் செல்கிறார்கள். மிகவும் நெருங்கிய உறவுகள் என்றால் அவர்களை பாராட்டுவதில் பரிசளிப்பதிலும் தவறுவதே இல்லை. எதார்த்தமான கதைகளை கொண்டாடும் மலையாள கலைஞர்களை - எளிமையாக வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி மறக்காமல் பாராட்டியது எல்லாரையும் சந்தோஷ படுத்தியது.

super star rajini appreciates malayalam movie
தொடர்ந்து நல்ல படைப்புகள் இப்படி பாராட்டுகள் பெற வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசையும்.
super star rajini appreciates malayalam movie

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X