சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... சிறப்பு வீடியோ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதையொட்டி அவருக்கு இணையதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அவரது 71வது பிறந்த நாளையொட்டி சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் இன்றைய தினம் வெகு விமர்சையாக அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்வுகளை அவர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சூப்பர்ஸ்டாருக்கு இணையதளத்தின் மூலம் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

வாழ்த்துக்கள் பகிர்வு
பலரும் தங்களது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் ரஜினியின் சினிமா கேரியர் குறித்த சிறப்பு வீடியோக்களையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சன்பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் சினிமா பயணம் குறித்த சிறப்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.

ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள்
இந்த வீடியோவில் ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் மற்றும் சிறப்பான படங்களின் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. ரஜினி என்றாலே ஸ்டைலும் பஞ்ச் டயலாக்கும் தானே. அந்த வகையில் இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை சிறப்பான வகையில் கவர்ந்துள்ளது.

அண்ணாத்த படம்
தீபாவளியையொட்டி ரிலீசான அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த படம் சிறப்பான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் வசூலையும் சன் பிக்சர்சுக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்த வகையில் தற்போது ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி வீடியோவை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

இந்திய சினிமாவின் பெருமை
மேலும் கேப்ஷனில் இந்திய சினிமாவின் பெருமை ரஜினிகாந்த். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் ஹாப்பி பர்த்டே ரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளது. வீடியோவின் வாய்ஸில் அகில உலகம் போற்றும் நடிகன் என்றும் தெரிவித்துள்ளது.
பிறந்தநாள் வீடியோ
தர்பார், காலா, அண்ணாத்த உள்ளிட்ட படங்களின் வீடியோக்கள் அந்த பிறந்தநாள் வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரஜினியின் சமீபத்திய பேமஸ் டயலாக் ஆன இனிமேல் தான் தரமான சம்பவங்களை பார்க்க போறீங்க என்ற டயலாக்கும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோவின் முடிவில் இந்த ஆட்டம் போதுமா குழந்தை என்று முடிக்கிறார் சூப்பர் ஸ்டார்.


Click it and Unblock the Notifications











