துஷாரா மேடம் வேற ரோலே இல்லையா? வேட்டையன் படத்தை ரோஸ்ட் செய்த ரசிகை!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் மக்களிடம் ரீச்சாகி நல்ல வசூலை அள்ளி வருகிறது. இதில் ரஜினிகாந்துடன், அமிதாப்பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் துஷாரா விஜயன் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து ரசிகை ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ஜெய்பீம் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அனிருத் இசையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். போலி என்கவுன்டர்கள் மற்றும் கல்வி மோசடி போன்ற பொதுமக்களின் பிரச்சனை வேட்டையன் படத்தில் பேசப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்திற்கு பின் அதியன் என்ற ரோலில் ரஜினி மாஸ் காட்டி உள்ளார். அப்படம் வெளியாகி நேற்றோடு 12 நாட்கள் ஆன நிலையில் படத்தின் மொத்த வசூல் ரூபாய் 325 கோடியாக உள்ளது.

vettaiyan rajini tj gnanavel 2

வேட்டையன்: பலரும் வேட்டையன் படத்தை கொண்டாடி வரும் நிலையில், வேட்டையன் படம் பார்த்த ரசிகை ஒருவர் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது இந்த படத்தில் துஷாரா விஜயன் தான் முக்கியமான ரோல் அவரை வைத்துத்தான் மொத்த கதையும் நகருகிறது. அப்படி இருக்கையில் துஷாராவின் கதாபாத்திரம் குறித்து பேசிய ரசிகை ஒருவர். துஷாரா நல்ல நடிகை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை,

vettaiyan rajini tj gnanavel 2

நல்ல நடிகைதான்: ஆனால், நீங்கள் ராயன் படத்தில் ரேப் செய்யப்பட்ட பெண்ணாக நடித்தீர்கள், அதே போல வேட்டையன் படத்திலும் ரேப் செய்யப்பட்ட பெண்ணாக நடித்து இருக்கிறீர்கள். அந்த ரேப் காட்சி இன்டர்வலுக்கு உள்ளே முடிந்துவிட்டாலும், ஆனால், படம் முடிவும் வரையும் அதே காட்சியை மீண்டும் மீண்டும் காட்டுவது கஷ்டமாக இருக்கிறது. அவங்களுக்கு நடிச்சாத்தான் காசு அது எனக்கு நல்லா தெரிகிறது இருந்தாலும், இதுபோன்ற படத்தில் நடிப்பதை தவிர்த்து விடுங்கள் என்று அந்த ரசிகை துஷாராவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.

vettaiyan rajini tj gnanavel 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X