போராட்டத்தில் இணையும் ரஜினி... தலைவர் 170 கதையில் மாற்றமா...? தசெ ஞானவேலின் மாஸ்டர் ப்ளான்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.
இதனைத் தொடர்ந்து லால் சலாம், தலைவர் 170 ஆகிய படங்களுக்காக கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இந்த இரண்டு படங்களுமே லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் நிலையில், விரைவில் படப்பிடிப்பும் ஆரம்பிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தின் கதை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

ஜெயிலர் டூ தலைவர் 170
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில். ஜெயிலர் ஷூட்டிங் ஸபாட்டில் இருந்து ரஜினியின் வீடியோ லீக்காகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக்ஷன் மோடில் கையில் அரிவாளுடன் இருக்கும் ரஜினியின் வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

போராட்டத்தில் இறங்கிய ரஜினி
ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170-ல் நடிக்கவுள்ளார் ரஜினி. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் அப்டேட் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. ரஜினி - தசெ ஞானவேல் - அனிருத் - லைகா என பிரம்மாண்டக் கூட்டணியில் உருவாகவுள்ள இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக காணப்படுகிறது. ஞானவேல் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜெய்பீம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவானது.

மிரட்டலான திரைக்கதை
அதேபோல், தலைவர் 170 படமும் ஒரு உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகிறதாம். அதன்படி, இந்தப் படத்தில் ரஜினி ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸராக நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், அவர் போலீஸாரால் நடத்தப்படும் என்கவுண்டர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பவர்ஃபுல்லான கேரக்டரில் நடிக்கிறாராம். அதுமட்டும் இல்லாமல் காவல்துறையில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்தும் பேசுவதாக திரைக்கதை எழுதப்பட்டுள்ளதாம்.

ஞானவேலின் மாஸ்டர் ப்ளான்
ஜெய்பீம் திரைப்படம் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குநர் ஞானவேல். அதேபாணியில் ரஜினியின் தலைவர் 170 படத்திலும் நல்ல வெயிட்டான சோஷியல் மெசேஜ்ஜை முன்வைக்க திட்டமிட்டுள்ளாராம். இதுபோன்ற கதைகளில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பதால், அது இன்னும் மக்களிடம் சென்று சேரும் என ஞானவேல் உறுதியாக நம்புகிறாராம். அதேபோல், ரஜினி முஸ்லிம் பெயர் கொண்ட கேரக்டரில் ரொம்பவே பவர்ஃபுல்லாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
ரஜினியுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் லிஸ்ட்டுடன் விரைவில் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் போஸ்டர்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. தலைவர் 170 நிச்சயமாக ரஜினிக்கு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் என அவரது ரசிகர்கள் அதீத நம்பிக்கையில் உள்ளனர். தலைவர் 170 அடுத்த ஆண்டு ரிலீஸாக உள்ளதால், விரைவில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











