70 வயதிலும் மாஸ் காட்டிய ரஜினி .. மீம்ஸ்களை போட்டு தள்ளும் ரசிகர்கள்
சென்னை : தர்பார் படத்தில் ரஜினி காட்டிய ஜிம் ஒர்க்அவுட் காட்சிக்கு மீம்ஸ்களை போட்டு தள்ளுகின்றனர் ரசிகர்கள்.
ரஜினியின் தர்பார் படம் பல கலவையான விமர்சனங்கள் கிடைத்த பின்பும் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் படத்தில் இருந்ததால் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்து இருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் இசையமைத்து இருக்கிறார்.

தர்பார் படத்தில் இரண்டாம் பாதியில் ரஜினி வில்லனை சந்திக்க போகும் முன் ஜிம்மில் மிக கடினமாக ஒர்க்அவுட்செய்வார். அப்போது திரையரங்கமே ரசிகர்களின் கூச்சல் சத்தத்தில் மூழ்கி போனது. அப்படி ஒரு மாஸ் காட்சியை ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ரஜினிக்கு வயதாகி விட்டது என்ற பிம்பத்தை அந்த காட்சி உடைத்தெறிந்து விட்டது.
படத்தின் இரண்டாம் பாதியில் வந்த அந்த காட்சி அனைவரும் ரசிக்கும் படி மிகவும் நன்றாக இருந்தது, திரையரங்கில் சும்மா விசில்கள் பறந்தன. அந்த அளவுக்கு அனைவரையும் வியக்க வைத்திருந்தது அந்த ஒர்க்கவுட் காட்சி. அந்த காட்சியில் ரஜினி இளம் வயது நடிகரை போல கனகட்சிதமாக பொருந்தி இருந்தார்.
தற்போது இந்த காட்சியை வைத்து ரசிகர்கள் பல மீம்ஸ்களை போட்டு குவித்து வருகின்றனர் .70வயதில் இப்படி ஒரு காட்சியை எந்த நடிகர் படத்திலும் எதிர்பார்க்க முடியாது போன்ற மீம்ஸ்களை தற்போது ரசிகர்கள் உருவாக்கி வருகின்றனர். அந்த மீம்ஸ்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களுக்காக ரஜினி செய்த இந்த காட்சிக்கு ரசிகர்கள் தங்களது அன்பை மீம்ஸ்கள் போட்டு தெரிவித்து வருகின்றனர்.

அதில் சில மீம்ஸ்கள் ரஜினியின் கடந்த காலத்தையும் தற்போதைய காலத்தையும் ஒப்பிட்டும் மீம்ஸ்கள் போட்டுள்ளனர். ஏன் என்றால் ரஜினிக்கு எந்திரன் படத்திற்கு பிறகு உடல்நிலை மிகவும் மோசமானது ரஜினி இனி திரைப்படங்களில் நடிப்பது கடினம் என்று கூட பேசப்பட்டது. அந்த அளவுக்கு மோசமான உடல்நிலையில் இருந்து தற்போது மாஸாக எழுந்து வந்துள்ளார் சூப்பர் ஸ்டார்.
தற்போது ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் கீர்த்தி சுரேஷ் ,சூரி,சதீஷ்,மீனா,குஷ்பு மற்றும் பிரகாஷ் ராஜ் போன்றோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. டி.இமான் அப்படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கிறார் .


Click it and Unblock the Notifications











