ரஜினிகாந்த் வீட்டில் தேசிய கொடி ஏற்றினார்..இணையத்தில் தீயாய்பரவும் புகைப்படம்!

சென்னை : நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் வசிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தின்படி, ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தினம்

நாட்டின் 75வது சுதந்திர தினம்

நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுதல், புராதன சின்னங்களில் தேசிய கொடி ஒளிருதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மக்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் புரொஃபைல் பிக்சராக தேசியக் கொடி படத்தை வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து பிரபலங்களும் பொதுமக்களும் தங்கள் சமூக வலைதள புரொபைல் பிக்சராக தேசிய கொடியை மாற்றி வருகின்றனர்.

வீட்டில் தேசிய கொடி

வீட்டில் தேசிய கொடி

அதன்படி நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தின் புரொஃபைல் பிக்சராக மூவர்ண கொடியை மாற்றினார். அதேபோல, மோகன் லால், மம்மூட்டி போன்ற முன்னணி நடிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய ப்ரொபைல் பிச்ச்சரை மாறினர் அதைத்தொடர்ந்து தற்போது அவரது வீட்டின் முன்பு தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. ரஜினிகாந்தை தொடர்ந்து மேலும் சில நடிகர்களின் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களும்

பொதுமக்களும்

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பிரதமர் கூறியதை ரஜினிகாந்த் தவறாமல் செய்கிறார் என நெட்டிசன்கள் பலர் தங்களுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். பொதுமக்களும் இன்ஸ்டாகிராம்,ட்விட்டர், வாட்ஆப் போன்ற சமூகவலைத்தளப் பக்கங்களில் தங்களது டிபியை மாற்றி தேசிய கொடியை வைத்துள்ளனர்.

ஜெயிலர்

ஜெயிலர்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. அப்படத்தில் அவருடன் முக்கிய கதாபாத்திரங்களில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X