’சும்மா கிழி’ சூப்பரா இருக்கு.. அனிருத் ஸ்டுடியோவில் தர்பார் பாடல்களை கேட்டு ரசித்த ரஜினி!

Recommended Video

Darbar Dubbing | Darbar Motion Pictures | Rajinikanth | A.R.Murugadoss

சென்னை: தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சும்மா கிழி' பாடல் நாளை மறுநாள் (நவ.,27) வெளியாகும் என்ற அறிவிப்பை இசையமைப்பாளர் அனிருத் நேற்று வெளியிட்டார்.

இந்நிலையில், நேற்று இசையமைப்பாளர் அனிருத் ஸ்டூடியோவிற்கு சென்ற ரஜினிகாந்த், தர்பார் படத்தின் பாடல்களை கேட்டு ரசித்துள்ளார்.

அனிருத் ஸ்டூடியோவில் ரஜினி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முதல் புல்லட்

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போலீஸ் அதிகாரியாக ரஜினி ஆதித்ய அருணாச்சலம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தர்பார் படம் போலீஸ் கதையை கொண்டு இருப்பதால், அதில் உள்ள பாடல்களை புல்லட்களாக உருவகப் படுத்தி இசையமைப்பாளர் அனிருத் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை அட்டகாசமாக வெளியிட்டார்.

சும்மா கிழி

சும்மா கிழி

பேட்ட படத்தில் ரஜினி இன்ட்ரோவுக்கு மரண மாஸ் பாடலை போட்ட அனிருத், தர்பார் படத்தில் ரஜினி இன்ட்ரோவுக்கு சும்மா கிழி என்ற பாடலை போட்டுள்ளார். ரஜினியின் சூப்பர் ஹிட் இன்ட்ரோ பாடல்களை பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த பாடலையும் பாடியுள்ளார். வரும் நவம்பர் 27ம் தேதி சும்மா கிழி பாடல் ரிலீசாகிறது.

தர்பார் பொங்கல்

தர்பார் பொங்கல்

இந்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட ரிலீசாகி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தர்பார் படம் வெளியாகிறது. ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் தர்பார் படம் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு விடுமுறை கொண்டாட்டமாக தியேட்டரில் களை கட்டவுள்ளது.

சந்திரமுகிக்கு அப்புறம்

சந்திரமுகிக்கு அப்புறம்

சந்திரமுகி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் தர்பார் படத்தில் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். சந்திரமுகியில் த(து)ர்காவாக கலக்கிய நயன்தாரா தர்பாரில் என்ன ரோலில் அசத்தவுள்ளார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

தளபதி ஸ்வாக்

தளபதி ஸ்வாக்

1991ம் ஆண்டு வெளியான தளபதி படத்தில் ரஜினியை தனது வித்தியாசமான லென்ஸ்களால் வெறித்தனமான சூர்யாவாக காட்டியிருந்த சந்தோஷ் சிவன், மீண்டும் தர்பார் படத்தில் இணைந்துள்ளார். சமீபத்தில் தர்பார் படத்தின் புகைப்படங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்களிலேயே சந்தோஷ் சிவனின் வேலைப்பாடு மாஸ் காட்டியுள்ள நிலையில், பொங்கலுக்கு படம் வெளியாகும் போது மொத்த ஸ்வாகும் திரையரங்குகளில் திருவிழாவை உண்டாக்கும்.

More from Filmibeat

Read more about: darbar தர்பார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X