ரஜினி நடிக்க மறுத்த சீன்... விடாமல் துரத்திய கேஎஸ் ரவிக்குமார்: இது படையப்பா பஞ்சாயத்து!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக ரஜினியின் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியுடன் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், செளந்தர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், படையப்பா படத்தில் ரஜினி ஒரு காட்சியில் முதலில் நடிக்க மறுத்து அதன் பின்னர் கேஎஸ் ரவிக்குமார் கட்டாயப்படுத்தியதால் ஓகே சொன்ன சம்பவம் நடந்துள்ளது.

 சூப்பர் ஸ்டாரின் படையப்பா

சூப்பர் ஸ்டாரின் படையப்பா

ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து லால் சலாம், தலைவர் 170 போன்ற படங்களிலும் நடிக்க உள்ளார். இந்நிலையில், படையப்பா படத்தில் ரஜினி நடித்த போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

 அந்த சீன் மட்டும் வேண்டாம்

அந்த சீன் மட்டும் வேண்டாம்

பாட்ஷாவுக்குப் பின்னர் ரஜினியின் மரண மாஸ் திரைப்படமாக வெளியானது படையப்பா தான். ரஜினியின் அப்பாவாக சிவாஜி நடித்திருந்தார், செளந்தர்யாவும் ரம்யா கிருஷ்ணாவும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் தான் ரஜினிக்கு வில்லியாக நடித்து பவர் ஃபுல்லாக கம்பேக் கொடுத்தார். ரஜினிக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையேயான காட்சிகளுக்கு தியேட்டரில் விசில் பறந்தன. அதனால் ஒரு குறிப்பிட்ட காட்சியில் மட்டும் நடிக்க ரஜினி முதலில் மறுத்துள்ளார்.

 துரத்திய கேஎஸ் ரவிக்குமார்

துரத்திய கேஎஸ் ரவிக்குமார்

மணிவண்ணனால் ஏமாற்றப்பட்டு, அப்பா சிவாஜியும் இறந்துவிட ரஜினி நடுத்தெருவுக்கு வந்துவிடுவார். அதேபோல் ரஜினியின் தங்கையாக நடித்த சித்தாராவுக்கு நிச்சயம் செய்திருந்த நாசர், இன்னொருவரை திருமணம் செய்துகொள்வார். அப்போது ரஜினி தன் தங்கை சித்தாரவுக்கு ஆறுதல் சொல்வதுபோல் ஒரு சீன் இருக்கும். அதில் ரஜினி அழுவது போல் காட்சி வைக்கலாம் என கேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார். ஆனால், மாஸ் ஹீரோவாக இருந்துகொண்டு அழுதால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அந்த காட்சிக்கு நோ சொல்லிவிட்டாராம் ரஜினி.

 ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்

ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்

ஆனால், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் ரஜினியை விடாமல் துரத்தி அந்த காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். இறுதியாக கண்களில் இருந்து சில துளிகள் மட்டும் கண்ணீர் வருவது போல சீன் வைத்துக் கொள்ளலாம் எனக் கூறி ஷூட் செய்தார்களாம். படம் வெளியானதும் ரஜினி அழுத அந்த காட்சிக்கு ரசிகர்களிடையே பயங்கர ரெஸ்பான்ஸ் இருந்துள்ளது. ரசிகர்களுடன் படையப்பா படம் பார்த்த ரஜினி இதனைப் பார்த்து சிலிர்த்துவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X