Rajini: தளபதி படத்தில் நடந்த மாற்றம்.. தண்டவாளத்தில் தலை வைத்த ரசிகர்.. ரஜினி பிறந்த நாள் ஸ்பெஷல்!

சென்னை: சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடலுக்கு ஏற்றார் போல அன்றும் இன்றும் சூப்பர் ஸ்டார் ஆகவே இருக்கிறார் ரஜினிகாந்த். சிவாஜி ராவ் என்கிற பேரையே மறக்கடித்து இன்று அனைவரும் அவரை சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகிறார்கள். அவரின் பிறந்தநாளை ரசிகர்கள் இணையத்தில் திருவிழாப்போல கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் அவரைப்பற்றிய பல சுவாரசியமான விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

ரஜினிகாந்த் அவர்கள் இன்று உலகமே கொண்டாடும் ஒரு மாஸ் நடிகராக வளர்ந்து இருக்கிறார் என்றால், அதற்கு பின் அவர் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார். சினிமாவிற்கு வரவேண்டும் என்றால், அழகாவும், கலராகவும் இருக்க வேண்டும் என்று இருந்த பிம்பங்களை எல்லாம் உடைத்து ரசிகர்கள் மத்தியில இன்று வரைக்கும் ராஜாதி ராஜாவாக சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

rajinikanth rajinikanth birthday rajini

சினிமாவின் ஆளுமை: தமிழ் சினிமால மிகப் பெரிய ஆளுமையா மாறிய ரஜினிகாந்தின் ரசிகர்களுக்காக கதையை மாற்றிய கதையும் நடந்து இருக்கு, தளபதி படத்தில் கிளைமாக்ஸ் ஆட்சியில ரஜினிகாந்த் அவர்கள் இறந்து விடுவது போலவும், மம்மூட்டி உயிரோடு இருப்பது போலத்தான் காட்சி அமைக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது. ஆனால், முதல் நாள், முதல் காட்சியைப்பார்த்த ரசிகர்கள் ரஜினி இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், ஸ்கிரீனை கிழித்து துவம்சம் செய்து விட்டார்கள். இதனால், வேறு வழியிலே இல்லாமல், மம்முட்டி இறந்துவிடுவது போலவும் ரஜினி உயிரோடு இருப்பது போலவும் காட்சி மாற்றி எடுக்கப்பட்டு பின் வெளியிடப்பட்டது. இந்தியன் சினிமாவிலேயே இதுபோன்ற ஒரு விஷயம் நடந்தது என்றால் அது ரஜினிக்கு மட்டும் தான் நடந்தது.

தண்டவாளத்தில் தலைவைத்த ரசிகர்கள்:அது மட்டுமில்லாமல், அருணாச்சலம் படத்தில் வடிவுக்கரசி அவர்கள் ரஜினியை பார்த்து, அனாதை பயலே என்று ஒரு வசனத்தை சொல்லி இருப்பார். அந்த வசனத்தை பேசுறதுக்கு வடிவுக்கரசி அவர்கள் ரொம்பவே பயந்தாலும், இயக்குனர் சொன்னதாலும், ரஜினிகாந்த் சொன்னதாலும் அந்த வசனத்தை பேசினார். ஆனால் படம் வெளியான பின் மிகப்பெரிய அளவுல பிரச்சனைகளை சந்தித்தார் வடிவுக்கரசி. ஒருமுறை, வடிவுக்கரசி ட்ரெயின்ல சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு, ரயிலை நிறுத்தி, ரஜினியிடம் வடிவுக்கரசி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட, வேறு வழியே இல்லாமல், வடிவுக்கரசி அங்கிருந்த அனைத்து ரசிகர்களிடமும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த அளவுக்கு ரசிகர்கள் மனதில் ரஜினிகாந்த் அவர்கள் என்றைக்குமே குடும்பத்தில் ஒருவராக மனதில் பதிந்து இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X