Thalapathy Re- Release Public Review: வேற லெவல்! ரஜினியின் தளபதி ரீ ரிலீஸ்.. கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அதாவது டிசம்பர் 12ஆம் தேதி தனது 74வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரது நடிப்பில் தற்போது கூலி படம் உருவாகி வருகின்றது. கூலி படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.

இன்று சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் என்பதால் அவரது நடிப்பில் கடந்த 1991ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது தளபதி திரைப்படம். 33 ஆண்டுகளுக்குப் பின்னர் தளபதி படத்தினை ரீ ரிலீஸ் செய்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது கருத்தினை மிகவும் மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தியுள்ளனர்.

rajinikanth rajinikanth birthday

தளபதி படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றாக இப்போதுவரை கொண்டாடப்படுகின்ற படமாக தளபதி உள்ளது. மணி ரத்னம் இயக்கத்தில் மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா என பலரது நடிப்பில் வெளியான இந்தப் படம் பெரும் வெற்றிப் படமாக மாறியது. இந்தப் படத்தின் மூலம் அரவிந்த் சாமி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தளபதி படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்திற்குப் பின்னர் இளையராஜாவும் மணிரத்னமும் இணைந்து பணியாற்றவில்லை.

rajinikanth rajinikanth birthday

தளபதி படத்தினை ரீ ரிலீஸில் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது விமர்சனத்தைத் தெரிவித்தனர். குறிப்பாக ரசிகர் ஒருவர் படம் குறித்து பேசும்போது, " சிறுவதிலேயே இந்தப் படத்தை நான் பார்த்திருக்க வேண்டும். ஆனால் என்னால் அப்போது பார்க்க முடியவில்லை. படம் சூப்பராக உள்ளது. 33 ஆண்டுகளுக்கு பின்னால் போனதுபோல் உள்ளது. டீவியில் பலமுறை பார்த்திருக்கின்றேன். ஆனால் பெரிய திரையில் இந்தப் படத்தைப் பார்க்கும்போது மிகவும் அருமையாக உள்ளது. சூப்பர் ஸ்டாரின் நடிப்பு பிரமிக்க வைக்கின்றது" எனக் கூறினார்.

rajinikanth rajinikanth birthday

மணிரத்னம்: அதேபோல் மற்றொரு ரசிகர் பேசும்போது, மணிரத்னம் மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் ஒரு படம் செய்ய வேண்டும். நான் 5ஆம் வகுப்பு படிக்கும்போது இந்தப் படம் ரிலீஸ் ஆனது. அப்போது என்னை எனது அப்பா கூட்டிக்கொண்டுபோய் படத்தைக் காட்டினாரா எனத் தெரியவில்லை. 33 ஆண்டுகளுக்குப் பின்னர் படம் பார்க்கும்போது அட்டகாசமாக உள்ளது. நடிப்பில் மிரட்டிவிட்டிருக்கின்றார். ஆக்‌ஷன் காட்சிகளிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும், கோபப படும் காட்சிகளிலும் அருமையாக நடித்துள்ளார். இப்படியொரு படத்தைக் கொடுத்த மணி ரத்னத்திற்கு நன்றி" எனக் கூறினார்.

rajinikanth rajinikanth birthday

காத்திருப்பு: மற்றொரு ரசிகர் கூறும்போது, " நான் எப்போது தளபதி படத்தினை ரீ ரிலீஸ் செய்வார்கள் என காத்துக் கொண்டு இருந்தேன். இத்தனை நாட்களான எனது அண்ணன், எனது நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம், தளபது படத்தினை முதல் நாள் முதல் காட்சி பார்த்ததும் என்ன எக்ஸ்பீரியன்ஸ் அவர்களுக்கு கிடைத்தது என சொல்லிக் கொண்டு இருந்தார்களோ அதை நான் இன்று அனுபவித்துவிட்டேன். படம் தொடங்கி முதல் 30 நிமிடங்கள் ரசிகர்கள் யாருமே சீட்டில் அமர்ந்து பார்க்கவில்லை. இந்த எமோஷன் சூப்பர் ஸ்டார் ஒருவருக்குத்தான் கிடைக்கும்" எனக் கூறினார்.

rajinikanth rajinikanth birthday

எமோஷன்: அதேபோல் மற்றொரு ரசிகை கூறும்போது, தளபதி வெறும் படம் மட்டும் இல்லை. அது ஒரு எமோஷன். படத்தினை தியேட்டரில் பார்க்கும்போதுதான் அந்த எமோஷன் கிடைக்கும். தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்றார். அதேபோல் மற்றொரு ரசிகை கூறும்போது, எங்க குடும்பமே தலைவர் ரசிகர்கள்தான். அதனால்தான் மழையிலும் வந்துள்ளோம். தலைவர் வெறித்தனம். தளபதி படத்தை பலமுறை பார்த்திருக்கின்றேன். பிறந்த நாளில் ரசிகர்களுடன் பார்க்கும்போது ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது எனக் கூறினார்.

rajinikanth rajinikanth birthday

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X