மஹாசிவராத்திரி சிறப்பு வழிபாடு.. பக்தி பரவசத்தில் நடிகர் ரஜினிகாந்த்!
பெங்களூரு : மஹாசிவராத்திரியை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார்.
சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதமாகும். சிவன் கோவில்களில் நடக்கும் நான்கு கால பூஜைகளில் விரதம் இருந்து கலந்து கொண்டால், நினைத்தது நடக்கும், சங்கடங்கள் நீங்கி மனம் தெளிவாகும்.
பல சிவ ஸ்தலங்களில் நான்கு காலபூஜை மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிவன் அருளை பெற்றனர்.

மஹாசிவராத்திரி விழாவில் ரஜினி
ஆன்மீகவாதியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பெங்களூரில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்திய மஹாசிவராத்திரி விழாவில் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார். இரவில் நடந்த வழிபாட்டில் ரஜினி கண்களை மூடி தியானம் செய்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஆதியோகி மையத்திற்கு
முன்னதாக நேற்று மாலை தனது அண்ணன் சத்தியநாராயணனுடன் பெங்களூருவில் கடந்த மாதம் சங்கராந்தி தினத்தில் புதியதாக 112 அடி உயர ஆதியோகி சிலை திறக்கப்பட்டது. திடீரென இந்த மையத்திற்கு சென்று வழிபாடு செய்தார். அண்ணனுடன் அவர் காரில் சென்ற போட்டோக்கள் வெளியாகின. இதில் நடிகர் ரஜினிகாந்த் ரோஸ் கலர் டீஷர்ட் அணிந்து இருந்தார்.

நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர்
ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்தது. இதில் ரஜினிகாந்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. மேலும், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்பும் கலந்து கொண்டார். அவரின் காட்சியும் முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

பண்ணை வீட்டில் படப்பிடிப்பு
தற்போது, ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு , மங்களூரில் காந்தாரா படத்தில் இடம் பெற்ற பண்ணை வீட்டில் நடந்து வருகிறது. இதில், ரஜினி மற்றும் ஷிவராஜ்குமார் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில், மோகன்லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், புஷ்பா பட புகழ் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











