ஒன் அண்ட் ஒன்லி ரஜினிகாந்த்! அம்பானி வீட்டு திருமணத்தில் நடந்த ரூசீகர சம்பவம் - வீடியோ ட்ரெண்ட்!

மும்பை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் இந்தியாவின் முதன்மை பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா இரண்டு நாட்களுகு முன்னர் அதாவது ஜூலை மாதம் 12ஆம் தேதி பிரம்மாண்டமாக நடை பெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

திருமணத்தில் பங்கேற்க வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலில் தனது குடும்பத்தினருடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார் அதன் பின்னர் நிரூபர்கள் தனியாக போஸ் கொடுக்கும்படி கேட்க, சிரித்த முகத்துடன் ஸ்டைலாகவும் மாஸாகவும் நின்று போஸ் கொடுத்து அசத்தினார். குறிப்பாக வேட்டி சட்டையில் மாஸாக வந்திருந்த சூப்பர் ஸ்டார் படையப்பா படத்தில் வரும் வசனத்தைப் போல, வயசானாலும் உன்னோட ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல" என்பது சரி என்பதைப் போலவே நடந்து கொண்டார்.

Rajinikanth Anupam Kher Anant Ambani Radhika Merchant

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருமண விழாக் கொண்டாட்டத்தில் மணமகன் ஆனந்த் அம்பானியுடன் இணைந்து நடனமாடினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக உலா வந்தது. இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான டாப் நடிகர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதனால் திருமண விழா நட்சத்திரங்களால் ஜொலித்தது எனலாம். தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் அட்லீ, சூர்யா - ஜோதிகா, விக்கி - நயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காலில் விழுந்த ரஜினி: இந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட அமிதாப் பச்சனைச் சந்தித்த ரஜினிகாந்த் உடனே அமிதாப் பச்சனை நோக்கி வேகமாகச் சென்று அவரது காலில் விழுந்து வணங்கிவிட்டு அவரிடம் பேசத்தொடங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது காலில் விழுகின்றார் என்பதை உணர்ந்த அமிதாப் பச்சனும் உடனே அதனைத் தடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது.

Rajinikanth Anupam Kher Anant Ambani Radhika Merchant

குவியும் பாராட்டு: சூப்பர் ஸ்டாரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக புகழின் உச்சிக்குச் சென்ற பின்னரும், வயது முதிர்ந்த பின்னரும் அமிதாப் பச்சன் காலில் விழுந்து வணக்கம் செலுத்துவதற்கான எண்ணம் வரவே தனி பக்குவமும் குணமும் தேவை என கூறி வருகின்றனர். ஏற்கனவே ஷாரூக்கான் அமிதாப் பச்சன் காலில் விழுந்து வணங்கும் வீடியோ இணையத்தில் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

அனுப்பம் கெர்: இப்படியான நிலையில் பாலிவுட் உலகில் நடிகராகவும் இயக்குநரகவும் வலம் வரும் அனுப்பம் கெர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் தனது மொபைலில் எடுத்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ரஜினிகாந்த் தோளில் கை போட்டபடி எனது நண்பன், ஒன் அண்ட் ஒன்லி ரஜினி காந்த் என பேசியுள்ளார். உடனே சிரித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒன் அண்ட் ஒன்லி அனுப்பம் என கூறுகின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் உலா வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X