S.Kக்கு தளபதி துப்பாக்கி தரும்போது.. சூப்பர் ஸ்டார் சும்மா விடுவாரா? என்ன கொடுத்து இருக்காரு பாருங்க

சென்னை: சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் அமரன். இப்படம் வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். சோனி பிக்சர்ஸ் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் புரெடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படம் வெளியாவதற்கு முன்னரே, படத்தின் மீது அனைவருக்கும் தனி எதிர்பார்ப்பு இருந்ததால், படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. இந்நிலையில் படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

ஏற்கனவே கூறியதைப்போல் இந்தப் படம் மறைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு உருவக்காப்பட்ட படம். இதனால் இந்திய உள்துறை அமைச்சகத்திடம் படத்தின் மொத்த கதையையும் சமர்பித்து, அவர்களிடம் ஒப்புதல் பெற்று, காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத் தளவாடங்களில் முழுப் படப்பிடிப்பும் நடைபெற்றது. மேலும் படத்தினை சென்சாருக்கு அனுப்புவதற்கு முன்னரே, இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு திரையிடப்பட்டது என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

rajinikanth sivakarthikeyan amaran

மேலும் படத்தினைப் பார்த்த இந்திய உள்துறை அமைச்சகம், ராணுவ வீரர்களுக்கு ஒரு சிறப்புக் காட்சி திரையிட படக்குழுவிடம் கேட்டுள்ளனர். அவர்களும் சரியெனச் சொல்ல, படம் பார்த்த ராணுவ வீரர்கள் படத்தை மட்டும் இல்லாமல் படக்குழுவினரையும் பாராட்டினர். குறிப்பாக சிவகார்த்திகேயனை, இந்திய ராணுவத்தில் சேர்ந்துகொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
வசூல் : படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் படத்தினை அதிக தியேட்டர்களில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. தமிழ் திரையுலகில் இருந்து இம்முறை மொத்தம் மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் சிவகார்த்திகேயனின் அமரனுக்குத்தான் அதிக தியேட்டர்கள் கிடைத்தது. குறிப்பாக படத்தினை தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 800 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டது. படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 42.3 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. முதல் இரண்டு நாளில் படம் கிட்டத்தட்ட 90 கோடிகள் வரை வசூல் செய்திருக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகின்றது.

சூப்பர் ஸ்டார்: இந்நிலையில் அமரன் படத்தினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போகவே, படக்குழுவினரை மனதார பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் இது தொடர்பான தகவல்களையும் ராஜ் கமல் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், "தனது நண்பர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான 'அமரன்' படத்தைப் பார்த்து மகிழ்ந்தார்.

பாராட்டு: நேற்று தனது நண்பர் கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த சூப்பர் ஸ்டார் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார். அத்துடன், அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன்,ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்தார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல் இணையத்தில் மட்டும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் வேகமாக பரவி வருகின்றது. இது படக்குழுவினரை மட்டும் இல்லாமல் ரசிகர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X