2024 நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கு ஆதரவு? சகோதரர் பரபரப்பு பேட்டி!

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கு ஆதரவாக வாய்ஸ் தரப்போகிறார் என சகோதரர் சத்யநாராயண ராவ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

ஆகஸ்ட் 10ந் ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது.

உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் நெல்சனுக்கு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

Super star Rajinikanth brother sathyanarayana rao interview about politics

ஜெயிலர் வெற்றி: கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தின் டார்க் காமெடி மூலம் பிரபலமான இயக்குநர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. பீஸ்ட் படத்தின் மூலம் நெட்டிசன்களின் விமர்சர்னங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஜெயிலர் படத்தில் காமெடி அதிரடியாக ஆக்ஷன் என அனைத்திலும் இறங்கி செய்துவிட்டார்.

பல கோடி வசூல்: ஜெயிலர் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் 25 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டித்தது. ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடியை தாண்டியுள்ளது. இப்படத்தில், சிவராஜ்குமார், மோகன் லால்,சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த ரவி என ஏராளமானோர் நடித்திருந்தனர்.

படம் பார்த்த சகோதரர்: இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா திரையரங்கில் ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயண ராவ் ஜெயிலர் படம் பார்த்தார். இதையடுத்து ஜெயிலர் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களும் பேசிய ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ்.

சூப்பர் ஸ்டார் ரஜினி தான்: ஜெய்லர் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. அடுத்ததாக லால் சலாம் படம் வெளியாக உள்ளது என்றார். இதையடுத்து, சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கேள்வி பதிலளித்த அவர், சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே மக்கள் கொடுத்தது. இனிமேல் அந்த பட்டம் என்பது யாருக்கும் கிடையாது. அவர் இருக்கும் வரை அவர் ஒருவர்தான் சூப்பர் ஸ்டார் என கூறினார்.

யாருக்கு ஆதரவு: மேலும், ரஜினியின் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் வாய்ஸ் தரமாட்டார். ரஜினி அரசியலுக்கும் வரமாட்டார். ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த கட்சிக்கு ஓட்டுப்போட்டுக்கொள்ளலாம் என்று ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயண ராவ் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X