தனுஷ் இல்லாமல் தாத்தாவுடன் தீபாவளி கொண்டாடிய பேரன்கள்.. ட்ரெண்டாகும் போட்டோ!
சென்னை: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இருவரின் மகன்களும் தாத்தாவுடன் தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா 2004ம் ஆண்டு தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். ஐஸ்வர்யாவும் தனுஷூம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

இருவரும் பிரிந்தனர்: இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே மாதிரி அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். 18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்கள், ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு பிரிந்தது அவர்களது ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கவலையில் ஆழ்த்தியது.
ரசிகர்கள் அறிவுரை: பல ரசிகர்கள் குடும்பத்தை பாருங்கள்... இரண்டு மகன்களை நினைத்துப்பாருங்கள் என்று அறிவுரை கூறிவருகின்றனர். ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் தலையிடாமல் மௌனமாக இருந்து விட்டார். இதனால், சில நாட்கள் மனவேதனையில் இருந்த ஐஸ்வர்யா, அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
லால் சலாம்: தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படத்தை இயக்கிஉள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லால் சலாம் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
தாத்தாவுடன் தீபாவளி: இந்நிலையில், ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினிகாந்த் தாயார் லதா மற்றும் மகன்களுடன் நேற்று தீபாவளியை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தற்போது அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், தந்தை தனுஷ் இல்லாமல் அவரது மகன்கள் தாத்தாவுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி உள்ளனர். இந்த போட்டோ தற்போது டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications