Ratan TaTa passed away: ரத்தன் டாடா மறைவு.. ரஜினிகாந்த் உருக்கமான பதிவு!
சென்னை: டாடா சன்ஸ் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86, வயது மூப்பு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக மும்பையில் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ரஜினிகாந்த் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த ரத்தன் டாடா, கடந்த 2012ம் ஆண்டு ஒய்வு பெற்றார். பல லட்ச இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் உலக தொழில்துறை அரங்கில் திறமையான தொழிலதிபராகவும் திகழ்ந்த ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலரை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவு செய்தி கேட்டு துயரமடைந்த மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நவிஸ் மருத்துவமனைக்கு சென்று ரத்தன் டாடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதே போல, ரிலையன்ஸ் குடும்ப தலைவர் முகேஷ் அம்பானி மருத்துவமனைக்கு சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இறுதி அஞ்சலி: இதைத்தொடர்ந்து, அவர் உடல் கொலாபாவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் சொல்லப்பட்டது. அவரது உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக அவரது உடல் மும்பையில் உள்ள கலைநிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் இவரது வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேசிய கொடி போர்த்தப்பட்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்தியாவின் உண்மையான மகன்: இந்நிலையில், ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதில், இந்தியாவை தனது தொலைநோக்குப் பார்வையாலும் ஆர்வத்தாலும் உலக வரைபடத்தில் இடம்பிடிக்க வைத்தவர். ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களை ஊக்கப்படுத்தியவர். பல தலைமுறைகளாக லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர். அனைவராலும் நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்ட மனிதர். இந்த பெரிய ஆளுமையுடன் பகிர்ந்த ஒவ்வொரு நொடியையும் நான் என்றென்றும் போற்றுவேன். இந்தியாவின் உண்மையான மகன் இனி இல்லை என உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு ஹீரோ: அதே போல் கமலும் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ரத்தன் டாடா தனிப்பட்ட முறையில் எனக்கு ஹீரோ. என் வாழ்நாள் முழுவதும் அவரை நான் பின்பற்ற முயற்சி செய்தேன். தேசத்தை கட்டியெழுப்புவதில் ரத்தன் டாடாவின் பங்களிப்பு நவீன இந்தியாவின் வரலாற்றில் பொறிக்கப்படும். அவரது உண்மையான செல்வம் பணத்தை சார்ந்தது இல்லை, மாறாக அவரது நெறிமுறைகள், நேர்மை, பணிவு மற்றும் தேசபக்தி ஆகியவற்றில் உள்ளது. 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, நான் தாஜ் ஓட்டலில் தங்கியிருந்தபோது அவரை சந்தித்தேன். மிகவும் நெருக்கடியான அந்த தருணத்தில், அவர் ஒரு பலமான ஆளுமையாக நிமிர்ந்து நின்றார் எனப் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











