விஜய்யின் அரசியல் வருகை.. ஒரே வார்த்தையில் ரஜினி சொன்ன நச் பதில்!

சென்னை: நடிகர் விஜய் பிப்ரவரி 2ந் தேதி தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நிலையில், அதற்கு ரஜினிகாந்த் முதன்முறையாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்துக்கும் நடிகர் விஜய்க்கும் இடையே கடந்த ஆண்டு பிரச்சனை ஆரம்பித்தது. இருவரின் பிரச்சனைக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் சரத்குமார் தான். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார், நடிகர் விஜய்யை சூப்பர்ஸ்டார் என சொன்னதற்கு அவர் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் சிரித்து சந்தோஷமாக இருந்ததை பார்த்த ரஜினி ரசிகர்கள் கடுப்பாகினர்.

Super star rajinikanth congratulates vijay political entry

அந்த பிரச்சனை கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில் ரஜினி ரசிகர்கள் vs விஜய் ரசிகர்கள் சண்டையாக மாறியது. மேலும், ரஜினி தான் என்னைக்கும் சூப்பர் ஸ்டார் என்று பட்டிமன்றம் வைக்கும் அளவிற்கு விவாதம் நடந்தது, இதையடுத்து, ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற டைகர் கா ஹுக்கும் பாடலில் பேர பறிக்க நாலு பேரு பட்டத்தை பறிக்க 100 பேரு என விஜய்யை மறைமுகமாக தாக்கி பாடல் வெளியானது.

காக்கா கழுகு கதை: இது மட்டுமில்லாமல், ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில், ரஜினி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நான் என்னைக்கும் ஆசைப்பட்டது இல்லை என்றார். மேலும், ரஜினி சொன்ன காக்கா கழுகு கதை மிகப்பெரிய வைரலானது. ரஜினி விஜய்யைத்தான் காக்கா என்று சொன்னார் என்று ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் சொல்ல, விஜய் ரசிகர்கள் விஜய் தான் என்னைக்கும் சூப்பர் ஸ்டார் என்று மாறி மாறி இணையத்தில் அடித்துக்கொண்டனர்.

விஜய் சொன்ன குட்டி கதை: இதைத் தொடர்ந்து லியோ வெற்றி விழாவில் விஜய்யும் ஒரு குட்டி கதையை சொன்னார். அதிலும், காக்கா - கழுகு இடம் பெற்றிருந்ததால், ரஜினிகாந்த் சொன்ன கதைக்கு பதிலடி என சினிமா வட்டாரத்தில் செய்தி பரவியது. சுமார் ஒரு வருடத்திற்கு மேல் நடந்து வரும் இந்த பஞ்சாயத்திற்கு ரஜினிகாந்த் அண்மையில் நடந்த லால் சலாம் இசைவெளியீட்டு விழாவில் முற்றுப்புள்ளி வைத்தார். அதில், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நான் சொன்ன காக்கா - கழுகு கதையை விஜய்யை மறைமுகமாக குறிப்பிட்டுப் பேசியதாக சோஷியல் மீடியாவில் பரவிய செய்தி உண்மையில் எனக்கு வருத்தமளித்தது. விஜய் என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த பையன். விஜய்க்கு போட்டி விஜய்தான். இதை இதோடு விடுங்கள் என்றதால் காக்கா கழுகு கதை பஞ்சாயத்து ஒரு வழியாக ஓய்ந்தது.

ரஜினியின் நச் பதில்: நடிகர் விஜய் கடந்த வாரம், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்றும், அதேநேரம் 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இந்த நிலையில், வேட்டையன் பட ஷூட்டிங்கிற்காக ஆந்திரா சென்ற ரஜினியிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு ரஜினி, அவருக்கு வாழ்த்துக்கள் என்று நச்சுனு ஒரே வார்த்தையில் பதில் அளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X