twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மம்தா பானர்ஜிக்கு தொலைபேசியில் வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் !

    |

    சென்னை : மேற்குவங்கத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதற்கு சகோதரி மம்தா பானர்ஜிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாத்து தெரிவித்துள்ளார்.

    294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன.

    கலைஞரின் பொற்கால ஆட்சியை கொடுத்து தமிழகத்தை மீட்டெடுத்து முத்திரை பதிக்க வேண்டும்.. தாணு வாழ்த்து! கலைஞரின் பொற்கால ஆட்சியை கொடுத்து தமிழகத்தை மீட்டெடுத்து முத்திரை பதிக்க வேண்டும்.. தாணு வாழ்த்து!

    இதில், 8-வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றன.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சி

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சி

    மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தி்ன் அறிவிப்பின்படி 213 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.

    பிரதமர் வாழ்த்து

    பிரதமர் வாழ்த்து

    மேற்குவங்கத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதற்கு, பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று சூழலில் மேற்குவங்க மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு மாநில அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் எனக் கூறினார்.

    பலரும் வாழ்த்து

    பலரும் வாழ்த்து

    மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்துள்ள மம்தா பானர்ஜிக்கு முக்கிய அரசியல் கட்சியின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், மாநில முதலமைச்சர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    தொலைபேசியில் வாழ்த்து

    தொலைபேசியில் வாழ்த்து

    அந்த வகையில், மேற்குவங்கத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதற்கு சகோதரி மம்தா பானர்ஜிக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    English summary
    Super Star Rajinikanth congratulations to mamata Banerjee
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X