Rajinikanth: சொதப்பிய லைகா.. தள்ளிப்போன விடாமுயற்சி.. அஜித்துக்கு ஆறுதல் சொன்ன சூப்பர் ஸ்டார்!
சென்னை: அஜித் ரசிகர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன துணிவு படத்தில் அஜித்தை தியேட்டரில் கொண்டாடியதோடு சரி, அதன் பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. அப்படி இருக்கும்போது இந்த தை பொங்கலுக்கு முதலில் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகவுள்ளது என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் தொடங்கிய, விடமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது எனக் கூறியதால், குட் பேட் அக்லி டீம் ரிலாக்ஸாக வேலை பார்க்கத் தொடங்கினர்.
தற்போது விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என படக்குழு அறிவித்ததால், ரசிகர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இப்படியான நிலையில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித்துக்கு ஆறுதல் கூறும் விதமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார், என சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகின்றது.

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போதுகூட, லைகா நிறுவனத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம்போல கருதுவதாக தெரிவித்தார். கடந்த ஆண்டில் மட்டும் லைகாவுக்கு, வேட்டையன், லால் சலாம் ஆகிய படங்களில் நடித்துக் கொடுத்தார். இதில் வேட்டையன் வணிக ரீதியாக லாபமான படம். மேலும் படத்தின் வெற்றியைக் கொண்டாடியபோது கூட, லைகா தரப்பில் அடுத்த படத்திற்கான கால் ஷீட் கேட்டுள்ளனர். ரஜினியும் இசைவு தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

விடாமுயற்சி: தமிழ் சினிமா வட்டாரத்தில், மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றுதான், லைகா. பொன்னியின் செல்வன் போன்ற பிரமாண்டமான படங்களை தயாரித்துள்ள நிறுவனம். ஆனால், விடாமுயற்சி போன்ற படத்தினை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய படக்குழு தரப்பில் அனைத்து முயற்சிகளும் நடைபெற்றுள்ளது. ஆனால், படத்தினை சென்சார் செய்வதில் உள்ள விதிமுறைகள், கால இடைவெளிகள் ஆகியவை தற்போது விடாமுயற்சி படத்திற்கு சிக்கலைக் கொண்டு வந்துள்ளது.

எப்போது ரிலீஸ்: அதன் காரணமாகவே, விடாமுயற்சி பொங்கல் ரேசில் இருந்து விலகியுள்ளது. அதேபோல் படத்தினை அதிக பட்சம் ஜனவரியிலோ, அல்லது ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக இயங்கி வருகின்றது. இப்படியான நிலையில் அஜித்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமாக லைகாவை கருதுவதாக கூறிய ரஜினி, லைகாவுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்ற பேச்சு திரைத்துறையில் பரவலாக பேசப்படுகின்றது.

ஆறுதல்: அதாவது, " நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்" இது அஜித் மற்றும் லைகாவுக்கு ரஜினிகாந்த் தெரிவிக்கும் ஆறுதல் மற்றும் புத்தாண்டு வாழ்த்து என பேசப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











