சிறப்பான தரமான சம்பவங்கள் இனிமேல்..'கூலி'யின் ஆட்டம் ஆரம்பம்.. நாளைக்கு வெளியாகும் மாஸ் அப்டேட்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில், படம் குறித்த மாஸ் அப்டேட்டை படக்குழு நாளை வெளியிட உள்ளது.
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது திரைப்படமாக உருவாகி உள்ள திரைப்படம் வேட்டையன். இந்தப்படத்தை ஜெய்பீம் திரைப்பட புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்தபடத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியரோலில் நடித்துள்ளனர்.

வேட்டையன்: தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வேட்டையன் படம் அக்டோபர் 10ந் தேதி வெளியாக உள்ளது.
கூலி : இந்த படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, மஹேந்திரன் போன்ற நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், 2025 ஆம் வருடம் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பான் இந்திய படம்: படத்தின் போட்டோ ஷூட்டுகள் கடந்த ஜூலை மாதம் நடந்து முடிந்தது. ரஜினிக்கு வெயிட்டான ஒரு வில்லனை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முடிவு எடுத்து இருக்கிறார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்து இருப்பது பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் அமீர்கான் தான். தற்போது படத்தின் கதை பற்றியும், அவருடைய கேரக்டர் பற்றியும் லோகேஷ் கனகராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
கூலி அப்டேட்: இந்நிலையில், கூலி திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட்டை நாளை வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது நாளை மாலை 6 மணிக்கு, கூலி படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











