Coolie: முன்பதிவில் அதிர வைத்த கேரளா.. கூலி செய்த ரெக்கார்ட் பிரேக் கலெக்ஷன்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ், ஆமீர்கான், நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாயிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன் பதிவி தொடங்கி உள்ள நிலையில், கேரளாவில் ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், ஒரு மணி நேரத்திலேயே 5ஆயிரம் டிக்கெட் விற்பனை ஆகி உள்ளது.

ஆகஸ்ட் 8, 2025 அன்று, 'கூலி' முன்பதிவு குறித்த தகவல்களை சன் பிக்சர்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டது. அதில், கேரளாவில் உள்ள ஒரு திரையரங்கில் ரஜினிகாந்த் ரசிகர்கள் டிக்கெட் வாங்க முண்டியடித்த வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. "கேரளாவில் கூலி பட முன்பதிவுக்காகவே திரையரங்குகளை ரசிகர்கள் சூறையாடி வருகின்றனர்" என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வீடியோவில், நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூலி டிக்கெட்டுகளைப் பெற திரையரங்கு வாயில்களுக்கு வெளியே காத்திருந்தனர். நுழைவாயில்கள் திறக்கப்பட்டதும், ரசிகர்கள் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு, முதல் நாள் முதல் ஷோ டிக்கெட்டுகளை வாங்க ஓடினார்கள்.

coolie Rajinikanth lokesh ganagaraj
Photo Credit:

அதிரவைத்த கேரளா: சாக்னில்க் தகவல்படி, கேரளாவில் கூலி படத்திற்கான முன்பதிவு சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. சுமார் 2 லட்சம் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனையாகியுள்ளன நிலையில், ஒரு மணி நேரத்தில் 50,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. கூலி முன் பதிவு டிக்கெட் விற்பனையில், கேரளாவில் மட்டும் ₹3 கோடி வசூலாகியுள்ளது, இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல வெளிநாட்டு முன்பதிவு ₹30 கோடியை எட்டியுள்ளது. இதனால், விஜய்யின் லியோ படம் வெளிநாடுகளில் ₹66 கோடி வசூலை செய்தது, அந்த வக்ஷலை கூலி படம் முறியடிக்கலாம் என கூறப்படுகிறது.

எவ்வளவு கோடி ஓபனிங்: சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இந்த படத்தில் ரச்சிதா ராம், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்.ஜி.ஆர், கண்ணா ரவி, மோனிஷா பிளெஸ்ஸி, காளி வெங்கட் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். அமீர் கான் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் ஆகஸ்ட் 14 அன்று வெளியாக உள்ளது. இதில், காலை 6 மணிக்கு கேரளாவில் முதல் காட்சியும், தமிழ்நாட்டில் 9 மணிக்கு முதல் காட்சியும் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 14 அன்று ரஜினிகாந்த் நடித்த கூலி, ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள அயன் முகர்ஜியின் 'வார் 2' படங்கள் நேரடியாக மோதுகிறது. இதனால், கூலி திரைப்படம் எவ்வளவு கோடி ஓப்பனிங் செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X