சூப்பர் ஸ்டாரின் கூலி சூட்டிங் ஓவர்.. எப்போது ரிலீஸ் தெரியுமா? வந்தாச்சு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கூலி. இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. சூப்பர் ஸ்டாரை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் இந்த படத்துக்கு சன் பிக்சர்ஸ் தான் தயாரிப்பு நிறுவனம் என்ற தகவல்கள் வந்ததில் இருந்து ரஜினிகாந்த் ரசிகர்கள் தீபாவளி கொண்டாடும் அளவிற்கு மகிழ்ச்சியாக உள்ளார்கள். காரணம் காம்பினேஷன் அப்படி. படத்தை இந்திய அளவில் கொண்டு சேர்க்க ஏதுவாக நட்சத்திரங்களை படத்தில் களமிறக்கி உள்ளதால் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளது.
சூப்பர் ஸ்டாருக்கான எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும் தயாரிப்பு நிறுவனம் என்றால் அது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மட்டும் தான். இதனால் படம் கன்ஃபார்ம் வெற்றி, அதில் சந்தேகமே வேண்டாம் என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் செம ஜாலியாக உள்ளார்கள். அதே நேரத்தில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பதால் படத்தை உருவாக்குவதில் இயல்பாகவே லோகேஷ் கனகராஜ்க்கு அழுத்தம் ஏற்பட்டுவிடுகிறது.

ரஜினிகாந்த்: காரணம், ஏற்கனவே, கார்த்தி, கமல், சூர்யா, விஜய் என அவர்கள் அனைவரது திரைவாழ்க்கையில் சம்பவம் செய்து வைத்துள்ளார். அப்படி இருக்கும்போது, அதில் எங்காவது கொஞ்சம் மாஸ் குறைந்தாலும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜை ஒரு வழி செய்துவிடுவார்கள். ஏற்கனவே படப்பிடிப்புக்கு இடையில், ரஜினிகாந்த் தான் ஏற்கனவே செய்த திட்டத்தின்படி செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்கு, லோகேஷ் கனகராஜ் மீது பழியைப் போட்டார்கள். அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக விளக்கம் கொடுத்த பின்னர்தான் ரசிகர்கள் அமைதி ஆனார்கள்.

கூலி: இப்படியான நிலையில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்கள். இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இதற்காக வெளியிடப்பட்ட வீடியோவில், லோகேஷ் கனகராஜ் 'ஆக்ஷன்' சொல்லும்போது, ஆக்ஷன் சார் எனக் கூறுகிறார். அதை உன்னிப்பாக கவனித்து ரஜினிகாந்த் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜை பாராட்டி வருகிறார்கள். படத்தில் அனைவருக்கும் சண்டை காட்சிகள் இருக்கிறது எனக் கூறப்படுகிறது. எனவே இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.
ஜெயிலர் 2: மேலும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதால் படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளார்கள். அதேபோல் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்திற்கான படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். சூப்பர் ஸ்டார் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆவதால், கூலி படத்தை கொண்டாட அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளார்கள்.



Click it and Unblock the Notifications











