Coolie: சூப்பர் ஸ்டாரின் கூலி படத்தில் உலகநாயகன் மகள்.. அப்டேட் ஒவ்வொன்னும் தெறிக்குதே!

சென்னை: சன் பிக்சர்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் கூட்டணி இணைந்து ஜெயிலர் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தனர். அதன் பின்னர் இவர்கள் மீண்டும் இணைந்துள்ள படம் கூலி. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கின்றார் என்பதோடு பலருக்கும் மகிழ்ச்சி அளித்த செய்தி என்னவென்றால், அது, படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பதுதான். மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கூட்டணியில் வெளியான மாஸ்டர், விக்ரம், லியோ படங்கள் வசூலில் மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றது.

கூலி படத்தின் அறிவிப்பு வெளியானதுமே பலரது மனதில் மகிழ்ச்சியைக் கொடுத்த செய்தி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நெகடிவ் ஷேட் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பதுதான்.அதேபோல் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் படம் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இந்தப் படம் இடம் பெறுமா என்ற கேள்விக்கு இப்போது வரை பதில் கிடைக்கவில்லை. இதுமட்டும் இல்லாமல், விஜய் மற்றும் ரஜினிக்கு இடையே கிட்டத்தட்ட பனிப்போர் நடந்து கொண்டு இருப்பதால் இந்தப் படம் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸீள் வர வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் கார்த்தி நடிப்பில் கைதி, கமல்ஹாசன் மற்றும் சூர்யா நடிப்பில் விக்ரம் மற்றும் விஜய் நடிப்பில் லியோ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

rajinikanth coolie shruti haasan

இந்நிலையில் கூலி படம் குறித்த அப்டேட்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்த நிலையில், படம் குறித்த அப்டேட்கள் நேற்று முன் தினம் முதல் அதாவது ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல், படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், படக்குழு வெளியிட்டு வரும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவருகின்றது.

rajinikanth coolie shruti haasan

புதிய அப்டேட்: இந்நிலையில், இன்று அதாவது ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிட்டுள்ள அப்டேட்டில் நடிகை ஸ்ருதிஹாசன் பீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும் ஸ்ருதிஹாசனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள போஸ்டரில், அவர் கையில் மம்பட்டி வைத்துக்கொண்டு உள்ளார்.

rajinikanth coolie shruti haasan

நடிகர்கள் பட்டாளம்: ஏற்கனவே படக்குழு தரப்பில் வெளியிடப்பட்ட அப்டேட்களில், மலையாள சினிமாக்களில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி பெரும் பாராட்டுகளைப் பெற்று வரும் நடிகரான சௌபின் சாஹிர் கூலி படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என படக்குழு தெரிவித்திருந்தது. இதுதான் படக்குழு வெளியிட்ட முதல் அப்டேட். அதன் பின்னர், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா கூலி படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என தெரிவித்தது.

பான் இந்தியா: இந்நிலையில் ஸ்ருதிஹாசன் படத்தில் நடிக்கின்றார் என்ற தகவல் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்க காரணமான லோகேஷ்க்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் படத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகர்கள் நடிக்கவுள்ளனர் எனவும் படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகின்றது எனவும் பேச்சுகள் அடிபடுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X