பள்ளிக்கு போக மாட்டேன்! அடம்பிடித்த பேரனை வாஞ்சையோடு பள்ளிக்கு அழைத்துச் சென்ற சூப்பர் ஸ்டார்!

சென்னை: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் குறித்த மற்றும் இவரது குடும்பம் குறித்த தகவல்களை அவரது ரசிகர்கள் மிகவும் ஆசையாகவும் அன்புடனும் தெரிந்துகொள்வதற்கு எப்போதும் தயாராக இருக்கின்றார்கள் என்றே கூறவேண்டும். இப்படியான ரசிகர்களுக்கு தற்போது தரமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது எனலாம். இந்த தகவல் பலருக்கும் சிரிப்பினை வரவைக்கலாம்.

ஆமாம், நடிகர் சூப்பர் ஸ்டாருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று அதாவது ஜூலை 26ஆம் தேதி காலை சுமார் 9.40 மணி அளவில் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ள இரண்டு புகைப்படங்களில் ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்தின் மகனுடன் காருக்குள் இருக்கின்றார்.

Rajinikanth Rajinikanth Daughter

சூப்பர் ஹீரோ தாத்தா: இந்த புகைப்படங்கள் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த், " இன்று எனது மகன் பள்ளிக்கு போகமாட்டேன் என அடம் பிடித்துக்கொண்டே இருந்தான். அவனுடன் நான் எவ்வளவோ போராடியும் அவன் தனது முடிவில் இருந்து பின் வாங்க மறுத்துவிட்டான். இப்படியான நிலையில் நான் உடனே சூப்பர் ஹூரோ தாத்தாவான எனது அப்பாவை கூப்பிட்டு விவரத்தைச் சொன்னேன். உடனே அவர் எனது மகனிடம் அன்பாக பேசி அவனை அவரே பள்ளியில் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்தார்.

Rajinikanth Rajinikanth Daughter

புகைப்படங்கள்: அப்பா நீங்கள் திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் உங்களிடம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாகவே செய்து விடுகின்றீர்கள் அப்பா" என பதிவிட்டுள்ளார். சௌந்தர்யாவின் இந்த பதிவுக்கு பலரும் நகைச்சுவையாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அவர் பகிர்ந்துள்ள இரண்டு புகைப்படங்களில் ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரனை ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லி சொல்கின்றார். ஆனால் அவரது பேரனோ முகத்தை திருப்பிக் கொண்டு இருக்கின்றார். அதன் பின்னர் இரண்டாவது புகைப்படத்தில் தனது பேரனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பள்ளியில் விட்டுவிட்டு தனது பேரனின் நண்பர்களை நோக்கி சிரிக்கின்றார்.

ரசிகர்கள் கமெண்ட்: இந்த இரண்டு புகைப்படங்களிலும் சூப்பர் ஸ்டார் செம அழகாக உள்ளார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். பள்ளிக்கு போகமாட்டேன் என அடம் பிடித்த பேரனை வாஞ்சையோடு பள்ளிக்கு அழைத்து சென்ற சூப்பர் ஸ்டார் எனவும், சூப்பர் ஸ்டார் கிட்ட தப்பிக்க முடியுமா எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்போது தனது பேரனையும் அழைத்துச் சென்றிருந்தார்.

Rajinikanth Rajinikanth Daughter

வெளியாகவுள்ள படம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் வேட்டையன். இந்தப் படத்தினை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் இந்த படத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X