பேரனை பள்ளியில் விடப்போன சூப்பர் ஸ்டார்! ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கமெண்ட்டில் ரகளை!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவின் மகன் பள்ளிக்கு போகமாட்டேன் என அடம் பித்ததாகவும், அதனால் தான் தனது அப்பாவின் உதவியை நாடியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் தனது பேரனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பள்ளிக்கு அழைத்துச் சென்ற புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். இது தொடர்பான செய்திகள்தான் நேற்று இணையம் முழுவதும் ஆக்கிரமித்தபடி இருந்தது.
குறிப்பாக சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் வாரித் தெளித்தவண்ணம் இருக்கின்றனர். இதுவரை சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு மட்டும், இரண்டு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். அதேபோல் பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

தனது பதிவில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மொத்தம் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் இரண்டாவது புகைப்படத்தில் தனது பேரனை வகுப்பறையில் விட்டுவிட்டு பேரன் உடன் படிக்கும் குழந்தைகளைப் பார்த்து சிரிக்கின்றார். இந்த புகைப்படத்தில் உள்ள ஒரு பெண் குழந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைப் தான் பார்த்துவிட்டேன் என்ற ஆச்சரியத்தில் தனது இரண்டு கைகளையும் வாயினை மூடிக்கொண்டு உள்ளார்.

ரசிகர்கள் கமெண்ட்: இதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த குழந்தையின் ரியாக்ஷனை குறிப்பிட்டு பல கமெண்ட்டுகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக சினிமாவில் வைக்கப்பட்ட பில்டப் பாடல்களான, " சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும்" பாடலையும், "உன் மகனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்" பாடல் வரியையும் குறிப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள்: மலையாள சினிமாவில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 2018 என்ற படத்தினை இயக்கிய இயக்குநர் ஜூடே அண்டனி ஜோசப் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் இந்த பதிவுக்கு, தலைவன் என கமெண்ட் செய்துள்ளார். வளர்ந்து வரும் நடிகர், கிஷோர் ராஜ் குமார், இன்னைக்கு ஸ்கூலுக்கு போகதவன் நிலமைய யோசுச்சுப் பாருங்க என, நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளார்.

விஜய் யேசுதாஸ் & டிடி: அதேபோல் பாடகர் விஜய் யேசுதாஸ், ஹேஹே என கமெண்ட் செய்துள்ளார். நடிகை மற்றும் தொகுப்பாளினி டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி, அந்த குழந்தைகளுக்கு சிறந்த காலைப் பொழுது. நமக்குமே சிறந்த காலைப் பொழுதுதான். இந்த பதிவுக்காக நன்றி சௌந்தர்யா என, கமெண்ட் செய்துள்ளார். அதேபோல் பனிமலர் பன்னீர் செல்வம், அந்த கடைசி குழந்தையோட எக்ஸைட்மெண்ட்டாலதான் அவர் நேற்றும் இன்றும் நாளையும் சூப்பர் ஸ்டார் என, பதிவிட்டுள்ளார்.

என்றும் சூப்பர் ஸ்டார்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 6 முதல் 60 வயதில் உள்ள அனைவரையும் தனது எளிமையினால் ஈர்த்து விடுகின்றார். பார்பதற்கே அழகாக உள்ளது எனக் கூறியுள்ளார் ஒருவர். மற்றொருவரோ நான் இந்த வகுப்பில் படிக்க ஆசைப்படுகின்றேன். அந்த கடைசி குழந்தையின் ரியாக்ஷன் தான் என்னுடைய ரியாக்ஷனும் என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவரோ, இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா என பாடல் வரிகளை குறிப்பிட்டு லவ் யூ தலைவா என கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











