வேட்டையன்: டப்பிங்கை தொடங்கிய ரஜினி.. இணையத்தில் வெளியான வீடியோ!
சென்னை: இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள வேட்டையன் படத்திற்கான டப்பிங்கை ரஜினிகாந்த் இன்று தொடங்கி உள்ளார். ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில், அசுரன், துணிவு ஆகிய படங்களில் நடித்த மஞ்சுவாரியர் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
ரஜினியின் 170வது படமாக உருவாகி உள்ளது வேட்டையன் படம். இப்படத்தில், ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, சர்வானந்த், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா, அபிராமி, கிஷோர், ரவிமரியா என நடிகர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது. எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜின் படதொகுப்பு பணிகளை செய்துள்ளார். இப்படம் அக்டோபர் 10ந் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், படம் வெளியாக குறுகிய வாரங்களே இருப்பதால், படத்தின் டப்பிங் வேலைகள் வேகவேகமாக நடந்து வருகின்றன.

வேட்டையன் வேட்டை ஆரம்பம்: மஞ்சுவாரியர், அபிராமி, துஷாராவைத் தொடர்ந்து ரித்திகா சிங் உட்படப் பலரும் டப்பிங் பேசிவிட்டனர். ரஜினி, கூலி படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், அதில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வேட்டையன் படத்திற்கு டப்பிங் பேசுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், இன்று ரஜினிகாந்த் வேட்டையன் படத்திற்கு டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதற்காக படக்குழு வெளியிட்ட வீடியோவில் ரஜினிகாந்த் மாஸ் என்ட்ரி கொடுக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி உள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்: ஜெய்பீம் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால், இந்த படம் போலவே, வேட்டையன் படமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அதே நாளில், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படமும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால், கோலிவுட்டில் பல மாதங்களுக்குப் பிறகு இரு பெரும் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இதில், கங்குவா திரைப்படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவருகின்றன.
வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மலையாள நடிகர் சௌபின் சாஹிர், தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா இப்படத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











