ரஜினிக்காக கோவில்.. தனது இல்லத்தை ரஜினி பவனமாக மாற்றிய ரசிகர்!
சென்னை: மதுரையைச் சேர்ந்த தீவிர ரஜினிகாந்த் ரசிகர் சரவணன் 'ஸ்ரீ ரஜினி பவன்' என்கிற பெயரில் வீட்டை கட்டி, தனது வீட்டை ரஜினி கோவிலாக வடிவமைத்துள்ளார். தினமும் அந்த சிலைக்கு பூஜை செய்து மாலை அணிவித்து வழிபாடு செய்து வருகிறார்.
இந்நிலையில், ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயணன், சரவணனின் வீட்டிற்கு வந்து, 'ஸ்ரீ ரஜினி பவன்' என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள வீட்டையும், சிலையை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் நமச்சிவாயா என்ற கோவில் கும்பாபிஷேகத்திற்காக வந்தேன். கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்ததை அடுத்து. இங்கு சண்முகத்தின் வீட்டை பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன். மிகவும் நன்றாக வீடு கட்டி இருக்கிறார். ரஜினியில் சிலை ரொம்ப நன்றாக சிரித்த முகத்தோடு தத்ரூபமாக இருக்கிறது.

ஸ்ரீ ரஜினி பவன்: இப்படி ரஜினி ரசிகர்கள் பலர் அவரை தெய்வமாக பார்க்கிறார்கள். அதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இப்படி மக்கள் தம்பி மீது வைத்து இருக்கும் அன்புக்காகத்தான், யார் அழைத்தாலும் அவர்களின் மகிழ்ச்சிக்காக அவர்களில் வீட்டிற்கு சென்று விடுகிறேன். உழைப்பு, நேர்மை, குடும்பத்தின் மீது அன்பு வைத்து அனைவரும் மகிழ்ச்சியாக, சீரும் சிறப்போடும் இருக்க வேண்டும் என சத்திய நாராயணன் பேசினார். இதைத்தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் சரவணன், தனது 35 ஆண்டு கால கனவு தற்போது தான் நிறைவடைந்துள்ளது.
சிலைக்கு சிறப்பு பூஜை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்த படம் வெளியானாலும், படம் வெற்றி பெற்று, பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற வேண்டும் என சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வருவதாக கூறியுள்ளார். இரண்டு அடுக்கு மாடியில், வீட்டின் சுவரில் ரஜினிகாந்தியின் புகைப்படத்தை போட்டு 'ஸ்ரீ ரஜினி பவன்' என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அந்த போட்டோ வண்ண விளக்குடன் ஜொலிக்கிறது. இதையடுத்து வீட்டில் ரஜினி சிரித்த முகத்துடன் இருக்கும் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார். அந்த பகுதி பொதுமக்களும் வியப்புடன் வீட்டை பார்வையிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











