Rajinikanth: இதனால்தான் ரஜினிகாந்த் கட்சி தொடங்கலயா? ப்ளூ சட்டை மாறன் பதிவால் ரசிகர்கள் ஷாக்!

சென்னை: முன்னாள் முதலமைச்சர்கள், ஜெயலலிதா மற்றும், கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர், தமிழக அரசியல்ம் களத்தில் வெற்றிடம் இருப்பதாக பரவலாக பேச்சு எழுந்தது. அரசியல் தளத்தில் எங்கு திரும்பினாலும் இது தொடர்பான பேச்சுகள்தான் அதிகம் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் கட்சி தொடங்கியவர்தான் கமல்ஹாசன். அதே காலகட்டத்தில் தனது அரசியல் வருகை குறித்து ரசிகர்களை நேரில் சந்தித்து உறுதி அளித்தார் ரஜினிகாந்த். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ஆனால், அடுத்த சில மாதங்களில், தனது உடல்நிலையைக் காரணமாகக் கூறி, அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை எனவும் எதிர்காலத்திலும் அரசியல் கட்சி தொடங்கும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்படியான நிலையில் ப்ளூ சட்டை மாறன், தனது எக்ஸ் பதிவில், ரஜினிகாந்த் கட்சி தொடங்காமல் போனதற்கான காரணம் இதுதான் எனக் கூறியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளார்.

rajinikanth blue sattai maran rajinikanth political

தமிழ் சினிமாவில் இருந்து தமிழ்நாடு அரசியல் களத்திற்கு வருவது என்பது, தமிழக அரசியல் களத்திற்கு புதிதானது இல்லை. ஆனால் அப்படி வந்தவர்கள் எல்லாம் அரசியலில் கரை சேர்ந்தார்களா என்பதுதான் கேள்விக்குறி? அப்படி தமிழ் சினிமாவில் இருந்து தமிழ்நாடு அரசியலில் களமிறங்கியவர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்டோர்தான் கரையைக் கடந்தார்கள். அதேநேரத்தில், நெப்போலியன், கார்த்தி, ராமராஜன் உள்ளிட்ட பலரும் சினிமா பிரபலத்தைப் பயன்படுத்தி அரசியலில் களமிறங்கினார்கள். விஜய்க்கு முன்னர் கட்சி தொடங்கிய கமல், கிட்டத்தட்ட திமுகவில் ஐக்கியமாகி விட்டார். இப்படியான நிலையில் நடிகர் விஜய் இந்த ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார். இவர் கட்சி தொடங்கும்போதே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல்தான் இலக்கு எனக் கூறியிருந்தார். அப்படியான நிலையில், கடந்த அக்டோபரில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நடத்தினார்.

ப்ளூ சட்டை மாறன்: கடந்த 6ஆம் தேதி எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தினை வெளியிட்டார். இந்த புத்தக உருவாக்கத்தில் முக்கிய காரணமாக இருந்த, ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து 6 மாத காலத்திற்கு நீக்கப்பட்டார். இப்படியான நிலையில், இன்று ஆதவ் அர்ஜுனாவே விசிகவில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ப்ளூ சட்டை மாறன், தனது பதிவில், குறிப்பிட்டிருக்கும் கருத்து பலருக்கும் கொஞ்சம் ஷாக் கொடுத்துள்ளது. அதாவது, ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், “ துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல்களை வேட்டையாடிய விஜய் அவர்களே.. விரைவில் உங்கள் கட்சியை நோக்கி ஒரு ஸ்லீப்பர் செல் ஏஜன்ட் வரவுள்ளார். அடுத்த வருடம் மேலும் சிலர் வருவார்கள்.

ரஜினிகாந்த்: உங்கள் அரசியல் வியூகங்கள் அனைத்தும் இவர்கள் மூலம் லீக் செய்யப்படும். தவறான ஆலோசனைகளை சொல்லியும் உங்களை திசை திருப்புவார்கள்‌. படத்தில் வருவது போல.. நிஜத்திலும் அலர்ட்டாக இருந்து...இவர்களை ஆரம்பத்திலேயே களை எடுத்தால் மட்டுமே.. ஆட்சியை பிடிக்க முடியும். தலீவர் கடைசி நேரத்தில் கட்சியை கலைத்து விட்டு அரசியலை விட்டு ஓடியது ஏன் தெரியுமா? கடைசி நேரத்தில் நடந்த சில மீட்டிங்கில்.. தனது கட்சியில் வேறு சில பெரிய கட்சிகளின் ஸ்லீப்பர் செல்கள் இருந்தார்கள் என்பதை உணர்ந்த பிறகுதான். ஆகவே..‌உஷாரய்யா... உஷாரு” என பதிவிட்டுள்ளார்.

அதிர்ச்சி: இதில் ரஜினிகாந்த் கட்சி தொடங்க திட்டமிட்டு, கடைசி நேரத்தில் அரசியலே வேண்டாம் எனக் கூறியதற்கு காரணம், தனது கட்சியில் வேறு சில பெரிய கட்சிகளின் ஸ்லீப்பர் செல்கள் இருந்தார்கள் என்பதை உணர்ந்ததால்தான் எனக் குறிப்பிட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X