Rajinikanth: ரஜினிகாந்த்தை அனாதைனு திட்டிய பிரபல நடிகை.. கொலை மிரட்டல் விடுத்த ரசிகர்கள்! இது எப்போ?
சென்னை: தமிழ்நாடு திரையுலகில் உள்ள நடிகர்களுக்கான ரசிகர்கள் பட்டாளத்திலேயே அதிக ரசிகர்களையும் தீவிரமான அன்பை வெளிப்படுத்தக்கூடிய ரசிகர்களையும் கொண்டவர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தினை சினிமாவிலே அல்லது நிஜ வாழ்க்கையிலோ யாராவது எதாவது கூறினால், ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகவேண்டி இருக்கும். இப்படியான சூழலுக்கு திரைபிரபலங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலரும் ஆளாகியுள்ளனர். அந்த வகையில் பிரபல நடிகையின் செயலால் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொலை மிரட்டலே விடுத்துள்ளனர். அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.
சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இணையம் வளராத காலத்தில் இருந்தே, ரஜினிகாந்த் மீது மிகவும் அன்பு வைத்துள்ளவர்கள். இவரைப் பார்த்து சினிமாவிற்குள் வந்தவர்கள் பலர் உள்ளனர். இவர் மூலம் சினிமாவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வளர்ந்தவர்களும் பலர் உள்ளனர். தன்னால் ஒரு தயாரிப்பாளர் அல்லது விநோகிஸ்தர் நஷ்டத்தினை சந்திக்கின்றார் என்றால், அவரது நஷ்டத்தை சரி செய்யக்கூடிய நடிகர் என சூப்பர் ஸ்டாரைக் கூறிப்பிடலாம்.

கருப்பு உருவம், சரியான நடனம் ஆடத் தெரியாது என பலரும் இவரை ஆரம்ப காலத்தில் விமர்சித்தனர். ஆனால் தமிழ் சினிமாவில் ஸ்டைல் என்ற ஒரு பரிமாணத்தை உருவாக்கியவர் என்றால் அது சூப்பர் ஸ்டார். இவரது கருப்பு நிறம்தான் வெகுமக்களிடம் இவரைக் கொண்டு சேர்த்தது. இன்றைக்கும் இவரது ரசிகர்கள் இவருக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ளார்கள். இப்போதும்கூட இணையத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையில் மோதல்போக்கு இருந்து வருகின்றது.

ரசிகர்கள்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் திரை வாழ்க்கையிலேயே அவருக்கு மிகவும் கச்சிதமான மற்றும் சரியான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் என்றால் அது ரகுவரன் மற்றும் ரம்யாகிருஷ்ணன் மட்டும்தான். இவர்கள் இருவரைக் கடந்து பல நடிகர்கள் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடித்திருந்தாலும் அவர்கள் யாருமே ரசிகர்கள் மனதில் சொல்லிக்கொள்ளும்படியான இடத்தினைப் பெறவில்லை. ஆனால் நடிகை வடிவுக்கரசி இதில் மிகவும் முக்கியமானவர் எனலாம்.

வடிவுக்கரசி: கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான படம் அருணாச்சலம். இந்தப் படத்தினை சுந்தர் சி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் கிரேஸி மோகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வேண்டுகோளுக்கினங்க இந்தப் படத்தில் பணியாற்றினார். அருணாச்சலம் படத்தில் வடிவுக்கரசி கதாபாத்திரம் மிகவும் மூர்க்கத்தனம் கொண்ட பாட்டி கதாபாத்திரம். இவருக்கு ரஜினிகாந்த்தினைக் கண்டாலே பிடிக்காது. எனவே ரஜினிகாந்த்தினை 'அனாதை பையன்' என படத்தில் திட்டுவார்.

கொலை மிரட்டல்: படம் வெளியாகி சில வாரங்களுக்குப் பின்னர், வடிவுக்கரசி திண்டுக்கல் ரயில்வே நிலையத்திற்கு வருவதை அறிந்த ரஜினிகாந்த் ரசிகர்கள், அவர் செல்ல இருந்த ரயிலை மறித்து போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் வடிவுக்கரசியை நோக்கி வெட்டிவிடுவோம் என்றெல்லாம் மிரட்டியுள்ளனர். மன்னிப்பு கேட்டால்தான் ரயில் செல்ல அனுமதிப்போம் எனக் கூறியுள்ளனர். உடனே வடிவுக்கரசியோ, அது சினிமாதானே, ரகுவரன் சாரும்தான் சூப்பர் ஸ்டாரை அடிக்கின்றார் எனக் கூறியுள்ளார். உடனே ரசிகர்கள், ஆனால் கடைசியாக ரகுவரன் அடிவாங்கிக் கொள்கின்றார் எனக் கூறியுள்ளனர். இதனால் செய்வது அறியாமல், ரஜினிகாந்த் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் வடிவுக்கரசி. அதன் பின்னர்தான் ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இந்த நிகழ்வை நடிகை வடிவுக்கரசி பேட்டி ஒன்றில் நினைவுகூர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











