Rajinikanth: வேகமாகச் சென்று அமிதாப் பச்சன் காலில் விழுந்த ரஜினிகாந்த்! இணையத்தில் உலா வரும் வீடியோ!

மும்பை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் இந்தியாவின் முதன்மை பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா இரண்டு நாட்களுக்கு முன்னர் அதாவது ஜூலை மாதம் 12ஆம் தேதி பிரம்மாண்டமாக நடை பெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பிரபலங்கள் வரவழைக்கப்பட்டனர். கடந்த ஆறு மாதங்களாக இந்த திருமணக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதற்காக அம்பானி மற்றும் மெர்சண்ட் குடும்பத்தினர் பல லட்சம் கோடிகளை செலவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

மணமக்கள் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமண விழா தொடர்பான வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்தபடி உள்ளது. குறிப்பாக இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்கின்றேன் என்ற உறுதி மொழியை வாசித்தது தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் மட்டும் இல்லாமல் அரசியல் தலைவர்களும் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

Rajinikanth Amitabh Bachchan

பிரதமர்: குறிப்பாக பிரதமர் மோடி திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மும்பையிலுள்ள ஜியோ வோர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இந்த திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் திருமணத்தையொட்டி உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தினர்.

திருமணக் கொண்டாட்டம் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருவதால் திருமணத்தினை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரமாண்டமாக நடத்தி வருகின்றனர். மேலும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் வீட்டுக் கல்யாணம் என்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து பிரபலங்களுக்கும் அழைப்பு சென்றுள்ளது.

ஷாரூக்கான்: இந்த திருமணத்திற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள நட்சத்திரங்கள் அனைவருக்கும் அழைப்பு சென்றுள்ளது. இதனால் நடிகர்கள் பலரும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தெல்லாம் இந்தியாவுக்கு வந்து திருமணத்தில் கலந்து கொண்டனர். குறிப்பாக ஷாருக்கான் வெளிநாட்டில் நடந்து கொண்டு இருந்த தனது படப்பிடிப்பினை நிறுத்தி விட்டு வந்தார். அதேபோல் அமெரிக்காவில் செட்டில் ஆகி, தற்போது ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்த பிரியங்கா சோப்ராவும் தனது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தனது கணவர் நிக் ஜோன்ஸுடன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வந்துள்ளார்.

Rajinikanth Amitabh Bachchan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும் திருமண விழாக் கொண்டாட்டத்தில் மணமகன் ஆனந்த் அம்பானியுடன் இணைந்து நடனமாடினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக உலா வந்தது. இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான டாப் நடிகர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதனால் திருமண விழா நட்சத்திரங்களால் ஜொலித்தது எனலாம். தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா - ஜோதிகா, விக்கி - நயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காலில் விழுந்த ரஜினி: இந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட அமிதாப் பச்சனைச் சந்தித்த ரஜினிகாந்த் உடனே அமிதாப் பச்சனை நோக்கி வேகமாகச் சென்று அவரது காலில் விழுந்து வணங்கிவிட்டு அவரிடம் பேசத்தொடங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது காலில் விழுகின்றார் என்பதை உணர்ந்த அமிதாப் பச்சனும் உடனே அதனைத் தடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது.

Rajinikanth Amitabh Bachchan

பாராட்டு: சூப்பர் ஸ்டாரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக புகழின் உச்சிக்குச் சென்ற பின்னரும், வயது முதிர்ந்த பின்னரும் அமிதாப் பச்சன் காலில் விழுந்து வணக்கம் செலுத்துவதற்கான எண்ணம் வரவே தனி பக்குவமும் குணமும் தேவை என கூறி வருகின்றனர். ஏற்கனவே ஷாரூக்கான் அமிதாப் பச்சன் காலில் விழுந்து வணங்கும் வீடியோ இணையத்தில் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X