Actor Rajinikanth: ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா.. கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைந்து வருகின்றன. கடந்த ஆண்டில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி கேமியோ கேரக்டரில் நடித்திருந்த லால் சலாம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இதையடுத்து அடுத்த மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணையவுள்ளார் ரஜினிகாந்த். 70 வயதை கடந்த நிலையிலும் தற்போதும் இளம் நடிகருக்கான எனர்ஜியுடன் அடுத்தடுத்த படங்களில் நிற்ககூட நேரமில்லாமல் ரஜினிகாந்த் நடித்து வருவது ரசிகர்களையும் சக நடிகர்களையும் கவர்ந்து வருகிறது.

Super star Rajinikanth gets UAE s golden visa and thanked for the same

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நடிகராக காணப்படுகிறார். சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்து மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கியிருந்தார்.

ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா: இந்நிலையில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இதையடுத்து வரும் ஜூன் மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சூட்டிங்கை துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டில் தான் ரிலீசாகும் என்று முன்னதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்திற்கு சர்வதேச அளவில் பல அங்கீகாரங்கள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஐக்கிய அரபு அமீரக அரசு ரஜினிகாந்த்திற்கு கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்துள்ளது.

ரஜினிகாந்த் நன்றி: இந்த கோல்டன் விசா மூலம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ரஜினிகாந்த் யூஏஇ அரசின் குடிமகனாக கருதப்படுவார். யூஏஇ அரசின் இந்த கௌரவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் யூஏஇ அரசிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் தனது நண்பர் லூலு குரூப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யூசப் அலிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அவர் இல்லாமல் இந்த கௌரவம் கிடைத்திருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் யூசப் அலியுடன் ரஜினி சந்தித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

கோல்டன் விசா பெற்ற நடிகர்கள்: இந்த கோல்டன் விசாவை பல துறைகளில் சாதனை புரிந்த நபர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி வருகிறது. அதில் திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்கள் இந்த கோல்டன் விசாவை வாங்கியுள்ளனர். இந்திய அளவில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் அமிதாப் பச்சனும், மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான் ஆகியோரும் தமிழில் கமல்ஹாசன், விக்ரம், பார்த்திபன், சிம்பு, விஜய் சேதுபதி, யுவன் சங்கர் ராஜா, திரிஷா, ஆண்ட்ரியா, மீனா உள்ளிட்டவர்களும் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் தற்போது ரஜினிகாந்த் இணைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X